Tamil News

All News
Cricket News
Politics
Cinema News

அறிவியல் பொய் சொல்லாது, ஆனால் பிரதமர் நரேந்திரமோடி பொய் சொல்வார்: ராகுல் காந்தி ட்விட்

டெல்லி: அறிவியல் பொய் சொல்லாது, ஆனால் பிரதமர் நரேந்திரமோடி பொய் சொல்வார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், மோடி அரசு  4.8 லட்சம் என பொய் சொல்கிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஒன்றிய அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Dinakaran , 6 May, 2022

தி.மு.க., அரசே முழு பொறுப்பு: அ.தி.மு.க., - பா.ஜ., கண்டனம்

...
Dinamalar , 20 April, 2022

மாற்றுக்கட்சியினர் 3,000 பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

சென்னை: மாற்றுக்கட்சியினர் 3,000 பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். திமுகவில் இணைந்தவர்களை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழர்களுக்கான எப்போதும் குரல் கொடுப்பது திமுக என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Dinakaran , 2 May, 2022

பிரசாந்த் கிஷோரை சேர்க்க எதிர்ப்பு! குழப்பத்தில் காங்கிரஸ் தலைமை

...
Dinamalar , 20 April, 2022

சஞ்சீவி மலையை அனுமன் சுமந்த மாதிரி இலங்கை பொருளாதார நெருக்கடியை சுமக்க பிரதமர் மோடி தயார்: அண்ணாமலை

நுவரெலியா: சஞ்சீவி மலையை அனுமன் சுமந்தது போல இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமக்க இந்திய பிரதமர் மோடி தயாராகவே இருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இலங்கை மலையகத்தில் இந்திய வம்சாவளி தமிழர்கள் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த மே 1- உழைப்பாளர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் அண்ணாமலை இன்று பேசியதாவது:
Thats Tamil , 2 May, 2022

குமுறுகின்றனர்.: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது தொண்டர்கள்.. கடுங்கோபம். சட்டசபையில் 'வழவழா' பேச்சால் அதிருப்தி

...
Dinamalar , 17 April, 2022

ரம்ஜானையொட்டி ஜோத்பூரில் பயங்கர மோதல்... பதற்றத்தால் இணையசேவை முடக்கம்... பரபரப்பு

ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரம்ஜானையொட்டி கொடி, பேனர் மற்றுமு் ஒலிபெருக்கி பொருத்துவது தொடர்பாக இருபிரிவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு பதற்றம் நிலவுவதால் அங்கு இணையதள சேவைகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அசோக் கெலாட் முதல்வராக உள்ளார். இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. வெயில் சுட்டெரித்தாலும் 5
Thats Tamil , 4 May, 2022

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து பிரதமர் மவுனம் காப்பது ஏன்?.. காங்கிரஸ் கேள்வி

டெல்லி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். மோடி முதலமைச்சராக இருந்திருந்தால் ஒன்றிய அரசை தேச விரோத அரசு என்று கூறியிருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்
Dinakaran , 9 May, 2022

6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் 'பரபர'.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன?

உதய்பூர்: உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனையாளர் மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாகவும், அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு வியூகங்களை வகுப்பது தொடர்பாகவும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மற்றும் விவாதிக்கப்படவுள்ள முக்கியமான 10 சீர்திருத்தங்கள்
Thats Tamil , 14 May, 2022

எந்த தேர்தல் நடத்தினாலும்... குஜராத்தில் ஆம் ஆத்மிதான் ஆட்சி அமைக்கும்..பாஜகவுக்கு கெஜ்ரிவால் சவால்

அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபைக்கு எப்போது தேர்தல் நடந்ததாலும் ஆம் ஆத்மி கட்சிதான் வெல்லும்; பாஜகவை வீழ்த்தி ஆட்சியை ஆம் ஆத்மிதான் கைப்பற்றும் என்று டெல்லி முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார். குஜராத் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற வேண்டும். குஜராத்தில் ஆளும் பாஜகவை பொறுத்தவரை மீண்டும் ஆட்சியைத்
Thats Tamil , 2 May, 2022

தி.மு.க.,வில் ராஜ்யசபா எம்.பி.,வேட்பாளர்கள் அறிவிப்பு!

...
Dinamalar , 16 May, 2022

திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் குமார் திடீர் ராஜினாமா.. அமித் ஷாவை சந்தித்த மறுநாளே முடிவு!

அகர்தலா: பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் பிப்லப் தேப் குமார் தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கோட்டையான திரிபுராவில் பாஜக வெற்றிபெற்றவுடன் அங்கு முதலமைச்சராக தேர்வு
Thats Tamil , 15 May, 2022

சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு

சென்னை: சட்டப்பேரவையில் மீண்டும் பேச அனுமதி கோரி அதிமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் அவர்களை குண்டுக்கட்டாக வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். அவைக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சட்டப்பேரையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அவைக்குள்ளேயே அமர்ந்து முழக்கம் எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.  
Dinakaran , 27 April, 2022

குழாயை திறந்தால் \"அது\".. அலறி ஓடிய மக்கள்.. கடைசியில் பார்த்தால்.. திக்.. திக்.. திருப்பத்தூர்..!

திருப்பத்தூர்: காலங்காத்தாலே குடிநீர் குழாயை திறந்தால், ரத்தம் கொட்டி உள்ளது.. இதை பார்த்து திருப்பத்தூர் மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடியுள்ளனர். பொதுவாக நகர்ப்புறங்களில் குடிநீர் குழாய்களில் அடைப்பு ஏற்படும்.. சுத்தப்படுத்தப்படாத அல்லது பல வருடங்களாக பயன்படுத்தப்படாத குழாய்களில் இத்தகைய அடைப்புகள் ஏற்பட்டு, குடிநீர் அசுத்தமாக வாய்ப்புள்ளது. பவரை காட்டணும்! திமுக அடுக்கிய 4 கண்டிஷன்ஸ்..
Thats Tamil , 4 May, 2022

மின்வெட்டு தொடர்பாக அமைச்சர் விளக்கத்தை ஏற்கமறுத்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

சென்னை: மின்வெட்டு தொடர்பாக அமைச்சர் விளக்கத்தை ஏற்கமறுத்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. நிலக்கரியை முறையாக கொள்முதல் செய்யவில்லை என கூறி அதிமுக வெளிநடப்பு செய்தது.
Dinakaran , 22 April, 2022

இந்திய பொருளாதாரம் கவலைக்கிடம்... மீட்டெடுக்க முடியாமல் திணறும் மத்திய அரசு... ப சிதம்பரம் சுளீர்

உதய்பூர்: ‛‛இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது . இதனை மீட்டெடுக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. உலக மற்றும் உள்நாட்டு வளர்ச்சியை கருத்தில் கொண்டு பொருளாதார கொள்கைகளை மறுசீரமைப்பு செய்வது அவசியாகும்'' என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கூறினார். இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பல்வேறு
Thats Tamil , 15 May, 2022

போலீஸ் காவலில் விசாரணை கைதிகள் உயிரிழக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: போலீஸ் காவலில் விசாரணை கைதிகள் உயிரிழக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அதிமுக ஆட்சியில் 12,74,036 எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு; திமுக ஆட்சியில் 5,66,653 முதல் தகவல் அறிக்கைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் குற்றச்செயல்கள் சுமார் 4 லட்சம் குறைந்துள்ளது என்று முதல்வர் குறிப்பிட்டார்.
Dinakaran , 10 May, 2022

ஆன்மீகத்தில் அரசியலை கலக்க விரும்பவில்லை: பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை பேச்சு

சென்னை: ஆன்மீகத்தில் அரசியலை கலக்க விரும்பவில்லை என பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்தார். கும்பகோணம் மகாமக விழாவிலும் 48 பேர் இறந்ததாக செல்வப்பெருந்தகை சட்டப்பேரவையில் பேசினார்.   
Dinakaran , 27 April, 2022

பிகேவுக்கு காங்கிரஸ் விடுத்த அழைப்பு: 2024க்காக இணையுமா இந்த கூட்டணி?

காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்கும் பணியை படிப்படியாக செயல்படுத்தலாம் என்ற கட்சி மேலிடத்தின் விருப்பத்துக்கு எதிரான நிலைப்பாட்டை பிரசாந்த் கிஷோர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
BBC , 18 April, 2022

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவிட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கோரி பேரவையில் தனி தீர்மானம்..!!

சென்னை: இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவிட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கோரி சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு உதவிட அனுமதி கோரும் அரசினர் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். இலங்கை தமிழர்களுக்கு திமுக ஆற்றிய பணிகளை அனைவரும் நன்கு அறிவீர்கள். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.
Dinakaran , 29 April, 2022

கோடநாடு கொலை வழக்கு: அதிமுக நிர்வாகியிடம் விசாரணை

கோடநாடு: கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக நிர்வாகி அனுபவ் ரவியிடம் விசாரணை தொடங்கியது. ஐ.ஜி.சுதாகர் தலைமையில் காலை 10.30 மணி முதல் அதிமுக நிர்வாகி அனுபவ் ரவியிடம் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது
Dinakaran , 18 April, 2022

தமிழ்நாட்டில் மின்வெட்டு நிலவ ஒன்றிய அரசே காரணம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

கும்பகோணம்: தமிழ்நாட்டில் மின்வெட்டு நிலவ ஒன்றிய அரசே காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார். மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிலக்கரியை ஒன்றிய அரசு ஒதுக்காததால் தான் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என கூறினார். 
Dinakaran , 23 April, 2022

'ஒன்றிய அரசு' சொல்லில் பிரிவினைவாதம்: தி.மு.க.,வுக்கு வானதி கடும் கண்டனம்

...
Dinamalar , 5 May, 2022

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேர் விபத்தில் காயமடைந்த 14 பேருக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். தஞ்சை அருகே களிமேட்டில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
Dinakaran , 27 April, 2022

நீட் தேர்வை தள்ளி வைக்க சொல்லிய மாணவர்களின் கோரிக்கை நியாயமானது: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: 21ம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து டிவிட்டரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில்; NEET PG கவுன்சிலிங் தாமதத்திற்கு மாணவர்கள் காரணம் இல்லை. எழுத்து தேர்வை தள்ளி வைக்க சொல்லிய மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. கொரோனா காலத்தில் இரவு பகல் பாராமல் மருத்துவர்கள் உழைத்தார்கள்; அரசு நீதி வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Dinakaran , 13 May, 2022

இலங்கை மக்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் ரூ.50 லட்சம் தர தயார்: பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: இலங்கை மக்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் ரூ.50 லட்சம் தர தயார் என்று பேரவையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருக்கிறார். மனிதநேயத்துக்கு அடையாளமாக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை தீர்மானம் விளக்குகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Dinakaran , 29 April, 2022

சொல்லியடித்த மம்தா... மேற்குவங்க இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி

கொல்கத்தா: மேற்குவங்கத்தின் ஒரு மக்களவை மற்றும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜகவை வீழ்த்தி திரிணாமூல் காங்கிரஸ் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. மேற்கு வங்கத்தின் அசான்சோல் மக்களவைத் தொகுதி, பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதி, சத்தீஸ்கரின் கைராகர் சட்டப்பேரவைத் தொகுதி, பீகாரின் போசாஹன் சட்டப்பேரவைத் தொகுதி, மகாராஷ்டிராவின் கோலாப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த
Thats Tamil , 17 April, 2022

தேனி மாவட்ட மக்களின் கனவு திட்டமான 18-ம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றியது திமுக அரசுதான்.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தேனி மாவட்ட மக்களின் கனவு திட்டமான 18-ம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றியது திமுக அரசுதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை கலைஞர் ஆட்சியில் ரூ.32 கோடியில் கட்டப்பட்டது.  சோத்துப்பாறை அணையாழ் 32 கிராமங்கள் பயன்பெறுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
Dinakaran , 30 April, 2022

டாப் கியருக்கு மாறும் காங்கிரஸ்! உதய்பூரில் அனல் பறந்த விவாதங்கள்.. விரைவில் அதிரடி மாற்றங்கள்

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் உதய்பூர் சிறப்புச் சிந்தனை அமர்வு கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அக்கட்சியில் முழு மறுசீரமைப்பைச் சேர்ந்து, பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று அக்கட்சிக்குள்ளேயே குரல்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில் தான்,
Thats Tamil , 15 May, 2022

தமிழகத்தில் பா.ஜ.க. திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது: திருமாவளவன் குற்றசாட்டு

மயிலாடுதுறை: தமிழகத்தில் பா.ஜ.க. திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக ஆளுநர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுவது திசை திருப்பும் முயற்சி என சீர்காழியில் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார். 
Dinakaran , 20 April, 2022

எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் எனது காரை எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்: சட்டப்பேரவையில் உதயநிதி பேச்சால் கலகலப்பு

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் எனது காரை எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என உதயநிதி தெரிவித்தார். ஆனால் எனது காரை எடுத்துக்கொண்டு கமலாலயம்(பாஜக அலுவலகம்) மட்டும் சென்று விடாதீர்கள் என உதயநிதி கூறினார். ஜார்ஜ் கோட்டையில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்முறையாக பேசிய உதயநிதியால் வழியில் கலகலப்பு ஏற்பட்டது.  
Dinakaran , 21 April, 2022

ராணுவ வீரர்களை அவமதிப்பது நாட்டை அவமதிப்பதாகும்.: காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி

டெல்லி: ராணுவ வீரர்களை அவமதிப்பது நாட்டை அவமதிப்பதாகும் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கூறியுள்ளார். முன்னாள் ராணுவ ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு விரைவாக ஒய்வூதியத்தை வழங்க வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்கள் பலருக்கு ஏப்ரல் மாதத்துக்கான ஒய்வூதியம் ஒன்றிய அரசால் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Dinakaran , 4 May, 2022

திருவாரூர் அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருவாரூர்: திருவாரூர் செம்படவன்காடு கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி சந்திரபோஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதிமுக இளைஞரணி நகர துணை செயலாளர் சந்திரபோஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதில் இருசக்கர வானம் தீப்பிடித்தது.
Dinakaran , 14 May, 2022

தீக்குளித்து கண்ணையா மரணம்: "சாகும்போதுகூட இடிப்பதை நிறுத்தியாச்சான்னு கேட்டார்"

இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ' ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இளங்கோ தெருவில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள 250-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துத் தள்ளும் பணியில் திமுக அரசு ஈடுபட்டுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றார்.
BBC , 9 May, 2022

குஜராத் வட்காம் தொகுதி காங். சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கைதுக்கு ராகுல் காந்தி கண்டனம்..!!

டெல்லி: குஜராத் வட்காம் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கைதுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மாற்றுக்கருத்தை கொண்டவர்களை பிரதமர் சிறை படுத்தினாலும் அவரால் உண்மையை சிறை வைக்க முடியாது என ராகுல்காந்தி காட்டமாக தெரிவித்திருக்கிறார்.
Dinakaran , 21 April, 2022

நைட் கிளப்.. நேபாள பெண்கள்! பார்ட்டியில் ஆடிய ராகுல் காந்தி?.. பரபர வீடியோ.. உண்மையில் நடந்தது என்ன?

காத்மண்டு: காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி நேபாளத்தில் இரவு நேர கிளப் ஒன்றில் நடனம் ஆடியதாக புகார் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் தலைவரை தேர்வு செய்வதற்கான குழப்பம் நிலவி வருகிறது. சமீபத்தில் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்ய பரிந்துரையை மேற்கொண்டார். பாஜகவை வீழ்த்துவது மட்டுமின்றி, மொத்தமாக
Thats Tamil , 4 May, 2022

திருவாரூரில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் அண்ணாமலை,கருப்பு முருகானந்தம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

திருவாரூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவாரூர் தெற்கு வீதி பெயரை டாக்டர் கலைஞர் சாலை என பெயர் மாற்றியதற்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
Dinakaran , 14 May, 2022

'என் சாவுக்கு திமுக கவுன்சிலரே காரணம்' - வேலூரில் ஊராட்சி செயலர் தற்கொலை

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த ராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக உள்ளவர் ராஜசேகர். இவர் இராமநாயிணிகுப்பம் ஊராட்சியில் கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று இரவு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார்.
BBC , 15 May, 2022

மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஜூன் 2022 அன்று நடைபெறவிருக்கும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கான தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கான 4 இடங்களில் இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Dinakaran , 15 May, 2022

இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இலங்கை மக்களுக்கு உதவ ரூ.80 கோடி மதிப்புள்ள 40,000 டன் அரிசி அனுப்பும் முதல்வரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது என அவர் கூறியுள்ளார்.
Dinakaran , 4 May, 2022

விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: செங்கம் தொகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நிலத்தை கண்டறிய அரசு முன்வர வேண்டும் என  திமுக எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார். உறுப்பினர்கள் நிலத்தை கண்டறிந்து சொன்னால் ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும். விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது என பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். 
Dinakaran , 18 April, 2022

பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் ராஜினாமா

சண்டிகர்: பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார். நவஜோத் சித்துவை தலைவராக்க பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சுனில் ஜாக்கர் விலக்கப்பட்டவர். பஞ்சாப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் தலைவர் பதவியை சித்து ராஜினாமா செய்திருந்தார். 
Dinakaran , 14 May, 2022

"சாகும் போதுகூட இடிப்பதை நிறுத்தியாச்சான்னு கேட்டார்" - மயிலைவாசிகள்

இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ' ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இளங்கோ தெருவில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள 250-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துத் தள்ளும் பணியில் திமுக அரசு ஈடுபட்டுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றார்.
BBC , 10 May, 2022

இந்து முன்னணி கூட்டத்தில் பெண்கள் பற்றி அவதூறு பேச்சு: வழக்கை ரத்து செய்யக் கோரி ஹெச்.ராஜா மனு

மதுரை: பெண்களை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஹெச்.ராஜா மனுதாக்கல் அளித்தார். பாஜகவின் ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்ற கிளை விரைவில் விசாரிக்க உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்தார். வேடசந்தூரில் 2018-ல் இந்து முன்னணி கூட்டத்தில் பெண்கள் பற்றி ஹெச்.ராஜா அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது.   
Dinakaran , 21 April, 2022

ராகுல் தான் வெறுப்பை விதைக்கிறார்: பா.ஜ.க., பதில் குற்றச்சாட்டு

...
Dinamalar , 21 April, 2022

இலங்கை மக்களுக்கு உதவிட ஒன்றிய அரசிடம் அனுமதி கோரும் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது..!!

சென்னை: இலங்கை மக்களுக்கு உதவிட ஒன்றிய அரசிடம் அனுமதி கோரும் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. ரூ.80 கோடி மதிப்பில் 40,000 டன் அரிசி, ரூ.15 கோடியில் பால் பொருட்கள், ரூ.28 கோடி மதிப்பில் மருந்து பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தமிழக அரசு முன்வந்துள்ளது. இலங்கைக்கு உதவ வி.சி.க. மற்றும் பாஜக ஒரு மாத ஊதியம் வழங்குகிறது.
Dinakaran , 29 April, 2022

உத்தரகாண்ட் இடைத்தேர்தலில் போட்டியிட முதல்வர் புஷ்கர் சிங் தாமி வேட்புமனு தாக்கல்

டேராடூன்: உத்தரகாண்ட்டில் இடைத்தேர்தல் நடக்கும் சம்பாவத் தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வேட்புமனு தாக்கல் செய்தார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்றாலும், புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
Dinakaran , 9 May, 2022

இலங்கை மக்களுக்கு சொந்த நிதியாக ரூ.50 லட்சம் தர முன்வந்த ஓ.பி.எஸ்.க்கு நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இலங்கை மக்களுக்கு சொந்த நிதியாக ரூ.50 லட்சம் தர முன்வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஓ.பன்னீர்செல்வம் ரூ.50 லட்சம் தருவதாக அறிவித்தார் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். இலங்கை மக்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் ரூ.50 லட்சம் தர தயார் என்று பேரவையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார். மனிதநேயத்துக்கு அடையாளமாக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை தீர்மானம் விளக்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
Dinakaran , 29 April, 2022

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சியின் முதல் கூட்டம்: சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சிவகங்கை: சிவகங்கை திருப்புவனம் பேரூராட்சியின் முதல் கூட்டத்தில் அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Dinakaran , 19 April, 2022

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக சார்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்

சென்னை: சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக சார்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சிபிசிஐடி விசாரிக்கும் விக்னேஷ் மரண வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
Dinakaran , 26 April, 2022

மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

சென்னை: முதலமைச்சர் பல அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்தார். அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என 110 விதியின் கீழ் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
Dinakaran , 22 April, 2022

ஸ்ரீபெரும்புதூர் திமுக கவுன்சிலர் அரிவாள்வெட்டு சம்பவம்: மேலும் 2 பேர் கைது

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் திமுக கவுன்சிலர் வீரபத்திரன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கூலிப்படையை சேர்ந்த இருவரை கைது செய்தனர். விழுப்புரத்தை சேர்ந்த பாலமுருகன், சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்த பரத் ஆகியோரை கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.    
Dinakaran , 2 May, 2022

பா.ம.க.,வுக்கு பாடம் புகட்ட முடிவு? அ.தி.மு.க., - பா.ஜ., ரகசிய பேச்சு

...
Dinamalar , 18 April, 2022

சசிகலா அரசியலுக்கு வந்தால் பார்க்கலாம்: ஓபிஎஸ் பேட்டி

நெல்லை: சசிகலா அரசியலுக்கு வந்தால் பார்க்கலாம் என தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்குவேன் என சசிகலாவின் கருத்து குறித்த கேள்விக்கு நெல்லையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னினீர்செல்வம் பதிலளித்துள்ளார். ஆன்மிக பயணத்தை முடித்த பின் அரசியல் பயணத்தை தொடங்குவேன் என சசிகலா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Dinakaran , 13 May, 2022

தி.மு.க., - ம.தி.மு.க., உறவில் விரிசல்?

...
Dinamalar , 27 April, 2022

தி.மு.க., தான் முதல் எதிரி: சூடேற்றினார் அமித் ஷா

...
Dinamalar , 28 April, 2022

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்திப்பு..!!

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர். ப.சிதம்பரம், அம்பிகா சோனி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் சோனியா காந்தியை சந்தித்து பேசினர்.
Dinakaran , 21 April, 2022

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். திருவிழா காலங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என எடப்பாடி தெரிவித்தார். தேர் விபத்துக்கு காரணமானவர்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். 
Dinakaran , 27 April, 2022

வன்னியர் இட ஒதுக்கீடு... தம்பிங்க சும்மா இருக்க மாட்டாங்க! யாரை எச்சரிக்கிறார் அன்புமணி ராமதாஸ்?

கள்ளக்குறிச்சி : வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், இல்லை என்றால் தம்பிகள் சும்மா இருக்கமாட்டார்கள் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய
Thats Tamil , 2 May, 2022

சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகிறார் எடப்பாடி பழனிசாமி..!!

சென்னை: சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாகிறார். அதிமுக அமைப்புகளின் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான 2ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக மாவட்ட செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியிருக்கிறார்.
Dinakaran , 25 April, 2022

இது உங்கள் இடம்: தி.மு.க.,வினர் வேடிக்கைகள் தொடரும்!

...
Dinamalar , 19 April, 2022

இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்கும் சர்ச்சை: வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு எப்படி உள்ளது?

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, இதுபோன்ற மாற்றங்களின் மூலம் இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிப்பதாக, மேகாலயாவில் தி வாய்ஸ் ஆஃப் தி பீப்பிள் கட்சியின் தலைவரான ஆர்டென்ட் மில்லர் பாசியாவ்மொய்ட் குற்றம் சாட்டுகிறார்.
BBC , 19 April, 2022

வரும் காலங்களில் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க பொதுப்பணித்துறைக்கு அரசு அறிவுறுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை: வரும் காலங்களில் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க பொதுப்பணித்துறைக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருக்கிறார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேசினார். காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை நேற்று அவையில் பேசியதை நீக்க பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.
Dinakaran , 28 April, 2022

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றியது ஏன்?: சபாநாயகர் அப்பாவு விளக்கம்

சென்னை: காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை தவறாக எதுவும் பேசவில்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றியது குறித்து சபாநாயகர் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், மகாமகம் விபத்து குறித்து அம்மையார் என்ன பேசினாரோ அவை குறிப்பில் உள்ளதை தான் செல்வபெருந்தகை பேசியுள்ளார். வெளிநடப்பு செய்த பிறகு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது மீண்டும் பேச அனுமதிக்க முடியாது. எந்த தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கவில்லை; அம்மையார் பேசியதை தான் பேசியுள்ளார் என குறிப்பிட்டார்.
Dinakaran , 27 April, 2022

துணை வேந்தர் நியமன விவகாரம்: பழைய குற்றச்சாட்டை மறந்த பா.ம.க.,

...
Dinamalar , 27 April, 2022

'காங்கிரஸ் இன்றி மத்தியில் ஆட்சி மாற்றம் சாத்தியமில்லை'

...
Dinamalar , 28 April, 2022

தி.மு.க., அரசு: ஓராண்டு பயணம் எப்படி...

...
Dinamalar , 7 May, 2022

தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கெயில் குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி கணேசன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட விவசாயி கணேசன் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு உற்ற தோழனாக என்றென்றும் திமுக அரசு விளங்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Dinakaran , 17 April, 2022

துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசு வசமே இருக்க வேண்டும்: ஜவாஹிருல்லா

சென்னை: துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசு வசமே இருக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்திருக்கிறார். அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த பல்கலைக்கழக துணைவேந்தர் மசோதாவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குமண்டல தேசிய கட்சி, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
Dinakaran , 25 April, 2022

சிவராஜ் சிங் செளஹான் பதவிக்கு ஆபத்தா? ம.பி அரசியலில் திடீர் திருப்பம்

முன்னாள் முதல்வர் கமல்நாத்துக்கு பதிலாக மூத்த தலைவர் கோவிந்த் சிங்கை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளது காங்கிரஸ் கட்சி எடுத்த முக்கிய முடிவு.
BBC , 2 May, 2022

குஜராத் தேர்தல்: காங்கிரஸுக்கு ஹர்திக் படேல் முழுக்கு? ட்விட்டரில் கட்சி பதவியை நீக்கியதால் பரபரப்பு

அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அம்மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல் பாஜகவுக்கு தாவுவது உறுதியாகி உள்ளது. தமது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவியை ஹர்திக் பட்டேல் நீக்கியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் நிலை உள்ளது. குஜராத் சட்டசபையின்
Thats Tamil , 4 May, 2022

புதிதாக கோளரங்கம் உருவாக்க நடவடிக்கை எடுத்தால், மதுரைக்கு முன்னுரிமை தரப்படும்.: அமைச்சர் பொன்முடி விளக்கம்

சென்னை: வரும் காலத்தில் புதிதாக கோளரங்கம் உருவாக்க நடவடிக்கை எடுத்தால், மதுரைக்கு முன்னுரிமை தரப்படும் என்று பேரவையில் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 4 கோளரங்கம் இருந்தாலும், தென்மாவட்டங்களில் ஏதும் இல்லை; மதுரையில் உடனடியாக கோளரங்கம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
Dinakaran , 20 April, 2022

நில அபகரிப்பு வழக்கில் அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் நிபந்தனைகள் தளர்வு..!!

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் நிபந்தனைகள் தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. திங்கட்கிழமை தோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த கோரிய ஜெயக்குமாரின் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என ஜெயக்குமாருக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார்.
Dinakaran , 25 April, 2022

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனு ஒத்திவைப்பு

டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என தமிழக அரசு தெரிவித்தது. டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 
Dinakaran , 2 May, 2022

ஒரே ஆண்டில் 10 ஆண்டு கால சாதனை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: 10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளைவிட அதிகமாக இந்த ஓராண்டில் செய்துள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு இதே நாளில் தான் திமுக வெற்றி பெற்றது. இலங்கைக்கு உதவி பொருட்களை அனுப்ப ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.
Dinakaran , 2 May, 2022

துணைவேந்தர் நியமன மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!!

சென்னை: துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னாள் முதல்வர்கள் பெயரை சட்டப்பேரவையில் குறிப்பிடுவது பற்றி காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. துணைவேந்தர் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக ஏற்கனவே அறிவித்திருந்தது.
Dinakaran , 25 April, 2022

பொதுஇடத்தில் ரம்ஜான் தொழுகைக்கு தடை... கார்கோன் வன்முறையால் மத்திய பிரதேச பாஜக அரசு உத்தரவு

போபால்: மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் ஏற்பட்ட வன்முறை காரணமாக ரம்ஜானையொட்டி நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் வீட்டில் இருந்து மட்டுமே ரம்ஜான் தொழுகை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த மாதம் ராமநவமி மற்றும் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின்போது
Thats Tamil , 2 May, 2022

ரயில்வே திட்டங்களை செயல்படுத்த கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டு, பணிகள் துவங்கப்படாமல் உள்ள ரயில்வே திட்ட பணிகளை ஒன்றிய அரசு விரைந்து செயல்படுத்த கோரியும், இதுதொடர்பாக, ஒன்றிய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தர கோரியும், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் காரணை ராதா தலைமை  தாங்கினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்து கொண்டு, பதாகைகள் ஏந்தியவாறு, கண்டன கோஷங்களை எழுப்பினர்.   
Dinakaran , 17 April, 2022

கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் அகற்றப்பட்டதை கண்டித்து பாஜகவினர் போராட்டம்

கோவை: வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து பிரதமர் மோடியின் படம் அகற்றப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தினர். கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில் பாஜகவினர் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்தனர். 
Dinakaran , 25 April, 2022

தப்பிப்பதற்காகவே விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளனர்: புகழேந்தி பேட்டி

சென்னை; தப்பிப்பதற்காகவே விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளனர் என அதிமுக முன்னாள் உறுப்பினர் புகழேந்தி பேட்டி அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்காதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Dinakaran , 26 April, 2022

இந்தி கட்டாய பாட மொழியா? வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு எப்படி?

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, இதுபோன்ற மாற்றங்களின் மூலம் இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிப்பதாக, மேகாலயாவில் தி வாய்ஸ் ஆஃப் தி பீப்பிள் கட்சியின் தலைவரான ஆர்டென்ட் மில்லர் பாசியாவ்மொய்ட் குற்றம் சாட்டுகிறார்.
BBC , 20 April, 2022

மாநில அரசின் முதலமைச்சரை பல்கலை.களின் வேந்தராக நியமிப்பதில் என்ன தவறு?: அமைச்சர் பொன்முடி கேள்வி

சென்னை: மாநில அரசின் முதலமைச்சரை பல்கலைக்கழங்கங்களின் வேந்தராக நியமிப்பதில் என்ன தவறு? என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியிருக்கிறார். குஜராத்துக்கு ஒரு சட்டம், தமிழ்நாட்டுக்கு ஒரு சட்டமா என்று பாஜகவினர் கேட்க அவர் வலியுறுத்தியுள்ளார். மசோதாவை எதிர்த்து வெளிநடப்பு செய்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் வேறு காரணம் சொல்லி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது என்றும் அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டிருக்கிறார்.
Dinakaran , 25 April, 2022

நாஞ்சில் சம்பத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினர்! கூண்டோடு தூக்கிய போலீஸார் !கும்பகோணத்தில் பரபரப்பு!

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நாஞ்சில் சம்பத்தை பாஜகவினர் முற்றுகையிட முயன்ற நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாஞ்சில் சம்பத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். ரோட்டரி சங்கம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நாஞ்சில் சம்பத் கும்பகோணம் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நாஞ்சில் சம்பத்தை.. நடுரோட்டில் நாலாபக்கமும் சுற்றி வளைத்த பாஜகவினர்..அதிர்ந்த போலீஸ்.. என்னாச்சு?
Thats Tamil , 15 May, 2022

தொழில்துறையில் தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறி வருகிறது; ரூ.65,375 கோடி முதலீடு ஈர்ப்பு: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: தொழில்துறையில் தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறி வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். பேரவையில் உரையாற்றிய முதல்வர், திமுக அரசு பதவியேற்றது முதல், புதிதாக தொழில் தொடங்க 137 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரூ.65,375 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். தமிழ்நாடு அன்னிய முதலீட்டை ஈர்ப்பதை பாராட்டி பல பத்திரிகைகள் தலையங்கம் எழுதியுள்ளன எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
Dinakaran , 19 April, 2022

சென்னையில் மழைநீர் கால்வாய் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் மழைநீர் கால்வாய் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். மழைநீர் கால்வாய் பணிகள் மந்தமாக நடப்பதால் சென்னை மீண்டும் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டடுள்ளது என தெரிவித்தார். 
Dinakaran , 14 May, 2022

திமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் பெட்ரோல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டதுதான் வரலாறு: பிரதமரின் புகாருக்கு தமிழக நிதியமைச்சர் விளக்கம்

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் பெட்ரோல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டதுதான் வரலாறு என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சரின் உரையை தொடர்ந்து நிதி அமைச்சர் பேசி வருகிறார். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் மீதான வரி 200 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது என்றார்.
Dinakaran , 28 April, 2022

'ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக': முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சியில் இருந்து விலகி 2,000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் விழாவில் முதலமைச்சர் பேசினார். அப்போது, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து போராடி, வாதாடி வருகிறோம் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.
Dinakaran , 2 May, 2022

புதுச்சேரி ஜிப்மரில் இந்தி சுற்றறிக்கையை கண்டித்து பாமகவினர் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் இந்தி சுற்றறிக்கையை கண்டித்து பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராஜீவ் காந்தி சிக்னலில் இருந்து பாமகவினர் பேரணியாக புறப்பட்டு காமராஜர் சாலை சென்று ஜிப்மர் முன்பு போராட்டம் நடத்துகின்றனர்.
Dinakaran , 11 May, 2022

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா: மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவுக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு அளித்தது. ஆளுநரின் அதிகாரத்தை திமுக அரசு மறுவரையறை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது.   
Dinakaran , 25 April, 2022

ராஜ்யசபா வேட்பாளரை தேர்வு செய்வதில் அ.தி.மு.க., தலைமை திணறல் !

...
Dinamalar , 15 May, 2022

தி.மு.க.,வில் 50 சதவீத மா.செ.,க்கள் மாற்றம்

...
Dinamalar , 6 May, 2022

பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக அறிவித்தது.
Dinakaran , 25 April, 2022

பிரசாந்த் கிஷோருக்கு காங்கிரஸ் விடுத்த அழைப்பு: 2024க்காக இணையுமா இந்த கூட்டணி?

காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்கும் பணியை படிப்படியாக செயல்படுத்தலாம் என்ற கட்சி மேலிடத்தின் விருப்பத்துக்கு எதிரான நிலைப்பாட்டை பிரசாந்த் கிஷோர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
BBC , 17 April, 2022

முக்கிய புள்ளிகளின் சிபாரிசு வேண்டி மதுரை தி.மு.க., நிர்வாகிகள் சென்னையில் முகாம்!

...
Dinamalar , 11 May, 2022

10 ஆண்டு சாதனைகளை ஓரே ஆண்டில் நிகழ்த்தியுள்ளது திமுக அரசு: கே.எஸ்.அழகிரி வாழ்த்து

சென்னை: 10 ஆண்டு சாதனைகளை ஓரே ஆண்டில் திமுக அரசு நிகழ்த்தி காட்டியுள்ளது. தலை நிமிர்ந்த தமிழகமாக மாற்றுகிற முயற்சியில் வெற்றி பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துகிறேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளர்.
Dinakaran , 7 May, 2022

அடுத்தமுறை தமிழ்நாடு வரும்போது முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்ட ராகுல்காந்தி விருப்பம்: பேரவையில் செல்வப்பெருந்தகை தகவல்..!!

சென்னை: அடுத்தமுறை தமிழ்நாடு வரும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்ட ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்ததாக பேரவையில் செல்வப்பெருந்தகை தகவல் அளித்துள்ளார். விளையாட்டுத்துறை சார்ந்த அறிவிப்பு வெளியிட்ட முதல்வருக்கு காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை நன்றி தெரிவித்துக்கொண்டார். போதிதர்மரின் மரபணுவில் வந்தவர்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனவும் செல்வப்பெருந்தகை பாராட்டு தெரிவித்தார்.
Dinakaran , 21 April, 2022

'மாஜி' மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்

...
Dinamalar , 14 May, 2022

ஏப்.28-ல் தமிழக காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்..: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: ஏப்.28-ல் தமிழக காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். தமிழக பாஜக தங்கள் இருப்பைக் காத்துக்கொள்ள இப்படி சத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆளுநரை எதிர்த்து போராடக்கூடாது என எந்த சட்டமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Dinakaran , 20 April, 2022

யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது..? கடுப்பான எடப்பாடி பழனிசாமி? என்ன காரணம்? பரபர பின்னணி..?

கள்ளக்குறிச்சி : திமுக ஆட்சிக்கு வந்து பதினோரு மாதம் நிறைவடையும் நிலையில் எவ்வித திட்டங்களையும் செய்யவில்லை என்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது என ஆவேசமாகப் பேசினார். கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற மே தின விழா கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான
Thats Tamil , 2 May, 2022

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்வதாக தெரிவித்த பிறகும் அதிமுக உறுப்பினர்கள்  பேரவையில் கோஷங்களை எழுப்பிய நிலையில் சபாநாயகர் உத்தரவை அடுத்து அவை காவலர்கள் மூலம் அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
Dinakaran , 20 April, 2022

தி.மு.க., அரசை வலியுறுத்தி அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

...
Dinamalar , 21 April, 2022