Tamil News

All News
Cricket News
Politics
Cinema News

தமிழ்நாட்டில் வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி, ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும்

டெல்லி: தமிழ்நாட்டில் வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி, ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில், 'உடான்' திட்டத்தின் கீழ் விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என நாடாளுமன்றத்தில் விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dinakaran , 23 March, 2023

\"அணு ஆயுத பேரழிவு!\" புதின் மீது கை வைத்தாலே குண்டு மழை ரெடியாக இருங்கள்.. ஓப்பனாக எச்சரிக்கும் ரஷ்யா

மாஸ்கோ: உக்ரைன் போர் விவகாரத்தில் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.. இதனிடையே புதின் நெருங்கிய நண்பர் இது தொடர்பாக சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் போர் தொடங்கி ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. ரஷ்யா இதைப் போர் என்று குறிப்பிடாமல் தனது நாட்டின் இறையாண்மையைக் காக்கவே இந்த சிறப்பு ராணுவ நடவடிக்கையை
Thats Tamil , 24 March, 2023

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது.
Dinakaran , 23 March, 2023

சதாம் ஹுசேனை வல்லரசுகள் வீழ்த்திய பழைய வரலாறு எழுப்பும் கேள்விகள்

இராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகவும், அது சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல் என்றும் அமெரிக்கா கூறியது. ஆனால், அந்த கூற்றை எத்தனை நாடுகள் நம்பின, எவை நிராகரித்தன என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
BBC , 21 March, 2023

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா நாளை மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா நாளை மீண்டும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகள், அரசின் விளக்கங்களையும் பேரவையில் விளக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
Dinakaran , 22 March, 2023

"எங்கோ ரத்த வெள்ளத்தில் நான் இறந்து கிடப்பேன் என நினைத்தேன்" (காணொளி)

தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சுய மரியாதை இயக்கத்தை முன்னெடுத்த பெரியாரின் முயற்சிகளுக்கு பிறகும் இந்த நிலையே தொடர்கிறது
BBC , 22 March, 2023

இந்துத்துவா பற்றி சர்ச்சை கருத்து: கன்னட நடிகர் சேத்தன் குமாரை கைது செய்த போலீஸ்

கன்னட நடிகர் சேத்தன் அஹிம்சா என்று அழைக்கப்படும் சேத்தன் குமார், இந்துத்துவா குறித்து பதிவிட்ட இடுகை வைரலானதை அடுத்து, அவரை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். "இந்துத்துவா பொய்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ள சேத்தன் குமாரின் ட்வீட், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அவர் மீதான புகாரில் கூறப்படுகிறது.
BBC , 22 March, 2023

அம்ரித்பால் சிங்: காரில் இருந்து பைக், மாற்று உடை- போலீஸை ஏமாற்றி தப்பித்தது எப்படி?

அம்ரித்பால் சிங் உடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை மட்டும் போலீஸால் இதுவரை கைது செய்ய முடியவில்லை.
BBC , 24 March, 2023

2 மாத குழந்தைக்கு மோசமான இதய பாதிப்பு.. உடனே ஆப்ரேஷன் செய்யணும்.. உயிர் பிழைக்க உதவுங்கள் ப்ளீஸ்

சென்னை: பிறந்து வெறும் இரண்டு மாதங்களே ஆன குழந்தை வேதாந்த்திற்கு மோசமான இதய பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையைச் சரி செய்ய அவனுக்கு உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும். இந்த ஆபரேஷனுக்காக உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.. அது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். குழந்தைகள் எப்போதும் நமது வாழ்க்கையை அழகாக்கிவிடும். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் கூட குழந்தைகளைப்
Thats Tamil , 24 March, 2023

இலங்கை நெருக்கடி: ஐ.எம்.எஃப் வழங்கும் ரூ. 24 ஆயிரம் கோடிக்கு பிறகாவது பொருளாதார சிக்கல் தீருமா?

நிதி நெருக்கடியால் திவால் நிலையை சந்தித்த இலங்கைக்கு ரூ.24,000 கோடி கடன் வழங்க ஐ.எம்.எஃப் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளுமா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
BBC , 21 March, 2023

கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரக்கு சமூக ஊடகங்களில் குவியும் பாராட்டு

இந்திய நீதித்துறையில் மூன்று திருநங்கைகள் நீதிபதி பதவியை வகித்து வருகின்றனர். 2017இல் மேற்கு வங்கத்தின் லோக் அதாலத்தில் ஜோயிதா மொண்டல், 2018இல் மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள லோக் அதாலத்தில் வித்யா காம்ப்ளே உறுப்பினர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு, அசாமின் குவாஹட்டியைச் சேர்ந்த ஸ்வாதி பிதான் பருவா திருநங்கை நீதிபதி ஆக நியமிக்கப்பட்டார்.
BBC , 21 March, 2023

புதுச்சேரியில் போராட்டம் நடத்திய பொதுப்பணித்துறை தற்காலிக ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி

புதுச்சேரி: புதுச்சேரியில் போராட்டம் நடத்திய பொதுப்பணித்துறை தற்காலிக ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர். பணிநிரந்தரம் கோரி சோனாம்பாளையம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி தற்காலிக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்திற்கு ஆதரவாக நீர்த்தேக்க தொட்டியின் கீழ் திரண்டிருந்த ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர்.
Dinakaran , 20 March, 2023

தமிழகத்தில் விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: நிலமற்ற பட்டியலின மக்களுக்கு அரசு சார்பில் தருவதற்காக ஒதுக்கப்படுவது பஞ்சமி நிலம் என அழைக்கப்படுகிறது. விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் திருப்பூர், தருமபுரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒருசில வட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை எனவும் கருப்பசாமி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Dinakaran , 21 March, 2023

ராணுவ வீரர்களுக்கு சிறுதானிய உணவுப் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: இந்திய ராணுவம் தகவல்

டெல்லி: இந்திய ராணுவ வீரர்களுக்கு சிறுதானிய உணவுப் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட பாரம்பரிய தானிய உணவுகள் தற்போது மீண்டும் வழங்கப்பட உள்ளது. 2023 சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுதானிய நுகர்வை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.   
Dinakaran , 22 March, 2023

மக்கள் நலன் மீது எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு அக்கறை இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்

சென்னை: மக்கள் நலன் மீது எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு அக்கறை இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் செய்துள்ளார். மக்கள் நலன் மீது அக்கறை இருந்திருந்தால் முழு பட்ஜெட்டை கேட்டு அதன் பின் கருத்து தெரிவித்து இருக்கலாம். திமுகவின் தொடர் வெற்றிகளை பொறுத்து கொள்ளாமல் பழனிச்சாமி கருத்துகளை கூறி வருகிறார் என அவர் கூறினார்.  
Dinakaran , 20 March, 2023

பட்டாசு ஆலைகளை கண்காணித்து, அவற்றை முறைப்படுத்த தனி விதிகளை வகுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பட்டாசு ஆலைகளை கண்காணித்து, அவற்றை முறைப்படுத்த தனி விதிகளை வகுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டாசு ஆலைகளுக்கு பொறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.  
Dinakaran , 22 March, 2023

ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?

நோன்பு இருக்கும் நாட்களில், சோர்வாக உணரப்படுவோம் என்பதால் அன்றைய தினங்களில் தூங்குவதை பலர் வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால் அத்தகைய சமயங்களில்தான் நீங்கள் உங்களை ஆரோக்கியமாக வைத்துகொள்வது அவசியம்
BBC , 23 March, 2023

சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய கல்வி கொள்கை

டெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் நர்சரி முதல் 2ம் வகுப்பு வரை புதிய கல்வி கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. NCERT இணையதளத்தில் பாடத்திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
Dinakaran , 21 March, 2023

ஹிந்து குழந்தைகளை வளர்த்த முஸ்லிம் தாய் பற்றி எடுக்கப்பட்ட படம்

எங்களுக்கு எந்தக்கஷ்டமும் தெரியாமல் வளர்த்தார்கள். நான் இந்த வீட்டில் அவர்களை என் பெற்றோராக நினைத்து வளர்ந்தேன். அவள் சென்ற பிறகு நான் எப்படி உணர்ந்தேன் என்று என்னால் விவரிக்கவே முடியாது.
BBC , 22 March, 2023

நம்பர் 1 இடத்தை தக்க வைக்குமா இந்திய அணி? சேப்பாக்கம் மைதானம் யாருக்கு சாதகமாக அமையும்?

சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். முந்தைய இரு ஆட்டங்களிலும் அவர் ரன்கள் எதுவுமே எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதுவரை ஆடியுள்ள 23 ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை மட்டுமே அவர் 50 ரன்களை கடந்துள்ளார்.
BBC , 22 March, 2023

எம்.பி பொறுப்பிலிருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: எம்.பி பொறுப்பிலிருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த பாஜக அரசை வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிவீட்டரில் பதிவிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாசிசவாதிகளை அச்சமூட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Dinakaran , 24 March, 2023

உரிய தகுதியின்றி மாற்றுமுறை மருத்துவத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: உரிய தகுதியின்றி மாற்றுமுறை மருத்துவத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. எஸ்.பி.க்கள், காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. செல்வகுமார், சண்முகம் உள்ளிட்ட 61 பேர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Dinakaran , 20 March, 2023

100 \"லட்சிய\" தொகுதிகள்.. தலைகீழாக மாறப்போகும் உத்தரபிரதேசம்..அதிரடி திட்டத்தை அறிவித்த முதல்வர் யோகி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் குறிப்பிட்ட 100 தொகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகள் போன்றவற்றை மேம்படுத்திட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இந்த தொகுதிகளை மாநிலத்தின் மற்ற தொகுதிகளுக்கு முன் மாதிரியாக மாற்றுவதே இதன் திட்டமாகும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடங்க உள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மொத்த தொகுதிகளையும்
Thats Tamil , 23 March, 2023

Rohit to miss first ODI against Australia, no vice-captain named for Test squad

Hardik to lead in Rohit's absence; no changes in the red-ball squad for the remaining two Tests
ESPN Cricinfo , 21 March, 2023

ராகுலின் தகுதி நீக்கம் ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகும்; ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும் - திருநாவுக்கரசர்

சென்னை: ராகுலின் தகுதி நீக்கம் ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகும்; ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும் - என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார் . ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது திட்டமிட்டு செய்யப்பட்ட நடவடிக்கை என அவர் கூறினார்.
Dinakaran , 24 March, 2023

ஏஜென்சி மோசடி: கேள்விக்குறியாகும் கனடாவாழ் இந்தியர்கள் பலரின் எதிர்காலம்

விசா பெறுவதற்கு போலியான சேர்க்கைக் கடிதங்கள், ஆவணங்கள், தவறான தகவல்கள் கொடுத்த நபர்களை வெளியேற்ற கனடா உத்தரவு பிறப்பித்துள்ளது. பிபிசியிடம் பேசிய மாணவர்கள் தாங்கள் நிரபராதி என்றும், ஜலந்தரில் உள்ள குடியேற்ற ஆலோசனை நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டதாகவும் அவர்களே இந்த ஆவணங்களை வழங்கியதாகவும் கூறுகின்றனர். இருப்பினும் மற்ற ஏஜென்சிகளுக்கும் இதில் தொடர்புள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
BBC , 21 March, 2023

அனைத்து சமூக பள்ளிகளையும் பள்ளிக் கல்வித்துறை கீழ் கொண்டுவரும் தமிழ்நாடு அரசின் துணிச்சலான முடிவை வரவேற்கிறேன்: திருமாவளவன்

சென்னை: அனைத்து சமூக பள்ளிகளையும் பள்ளிக் கல்வித்துறை கீழ் கொண்டுவரும் தமிழ்நாடு அரசின் துணிச்சலான முடிவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வரவேற்பு அளித்துள்ளார். பள்ளிகளின் பெயர்களில் இருந்த சாதி அடையாளங்களை நீக்க முன்வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் என திருமாவளவன் கூறினார்.  
Dinakaran , 20 March, 2023

மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராகுல் பேச்சு, அதானி விவகாரத்தால் மக்களவை மாலை 6 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
Dinakaran , 23 March, 2023

ஆபாச காட்சிகள் ஓடிய பாட்னா ரயில் நிலைய திரைகள் - அதிர்ச்சியில் பயணிகள்

இந்த விவகாரத்தில் மாநில அரசின் ரயில்வே காவல் துறை நடவடிக்கை எடுக்க தாமதமானதாகவும் பின்னர் ரயில்வே பாதுகாப்புப்படையினர் தத்தா கம்யூனிகேஷன் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, ஆபாச வீடியோவை ஸ்ட்ரீமிங் செய்வதை நிறுத்துமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
BBC , 21 March, 2023

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவில் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு-மேற்கு காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று இடி,மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இடி,மின்னலுடன் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் மார்ச் 25 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரை ரக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.
Dinakaran , 21 March, 2023

ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட விடாமல் செய்ய சதித்திட்டம்: திருமாவளவன் கண்டனம்

சென்னை: ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட விடாமல் செய்ய சதித் திட்டமிட்டுள்ளதாக  திருமாவளவன் தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி தகுதி நீக்கம் திட்டமிட்ட அரசியல் சாதி, இதை வன்மையாக கண்டிக்கிறோம். 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றால் தகுதி நீக்கம் செய்யலாம் என்பதால் வழிவாங்கும் நடவடிக்கை என அவர் தெரிவித்தார்.  
Dinakaran , 24 March, 2023

சென்னை எழும்பூர் நட்சத்திர விடுதியில் பெண் ஒருவரின் நண்பர்களை தாக்கியவர்களிடம் போலீசார் விசாரணை

சென்னை: சென்னை எழும்பூர் நட்சத்திர விடுதியில் பெண் ஒருவரின் நண்பர்களை தாக்கியவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். நட்சத்திர விடுதியில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததை தட்டிக்கேட்ட அவரது நண்பர்கள் மீது தாக்கல் நடத்தினர்.
Dinakaran , 21 March, 2023

"அதிமுக-பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை" - அண்ணாமலை டெல்லியில் தலைவர்களை சந்தித்தது ஏன்?

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு முதல்வர் கண்டனம் தெரிவித்ததற்கு பதிலளித்துள்ள பாஜகவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, "ஜனநாயகம் குறித்துப் பேச முதலமைச்சருக்கு அருகதை இல்லை" எனச் சாடியிருக்கிறார்.
BBC , 24 March, 2023

Data | Risky diet: Which Indian States top fried food and aerated drink consumption

According to NFHS-5, close to 80% men and women in Mizoram consumed fried food daily
The Hindu , 22 March, 2023

“மோடி” சாதி.. ராகுல் காந்தி சொன்ன “வார்த்தை”! 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஜாமீன் தந்த நீதிமன்றம்

காந்திநகர்: கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி சாதிப்பெயர் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உரையாற்றியது தொடர்பாக சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த அவதூறு வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உடனே ஜாமீனும் வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில்
Thats Tamil , 23 March, 2023

கறவை மாடுகளுடன் மார்ச் 28 முதல் போராட்டம்: உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முகமது அலி பேட்டி

நாமக்கல்: பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி வரும் 28-30 வரை கறவை மாடுகளுடன் போராட்டம் என  பால் உற்பத்தியாளர் சங்க மாநில தலைவர் முகமது அலி தெரிவித்துள்ளனர். கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். லிட்டருக்கு ரூ.7 உயர்த்தி தரவேண்டுமென  நாமக்கல்லில் பேட்டியளித்தார்.  
Dinakaran , 24 March, 2023

வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதலமைச்சருக்கு நடிகர் கார்த்தி நன்றி

சென்னை: வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண்துறை அமைச்சருக்கு நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்தார். தங்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை உழவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் வேளாண்மை சுற்றுலா, நீர் நிலைகள் சீரமைப்பு, மரபு விதைகள், சிறுதானிய உற்பத்திக்கு விருதுகள் போன்றவை அவசியமானது என என நடிகர் கார்த்திக் கூறினார்.   
Dinakaran , 22 March, 2023

ஜாலியன்வாலா பாக் படுகொலை: 21 ஆண்டுகள் காத்திருந்து உதம் சிங் பழிவாங்கியது எப்படி?

ஜாலியன்வாலா பாக்கில் படுகொலைகள் நடந்த நேரத்தில் உதம் சிங் அங்கே இருந்ததாகவும், அங்கிருந்த மண்ணை எடுத்து, ஒரு நாள் இந்த படுகொலைகளுக்கு பழிவாங்குவேன் என்று சபதம் செய்ததாகவும் பொதுவான நம்பிக்கை நிலவுகிறது.
BBC , 21 March, 2023

World Cup 2023 likely to start on October 5 and end on November 19

The final is set to be in Ahmedabad; 11 other Indian cities shortlisted as venues by BCCI
ESPN Cricinfo , 22 March, 2023

அடுத்த வாரம் திருமணம்.. தந்தை திடீர் இறப்பு.. நிலைகுலைந்த குடும்பம்.. சடலம் முன்பு தாலி கட்டிய மகன்

கள்ளக்குறிச்சி: உயிரிழந்த தந்தையின் முன்பு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (70). திமுக பிரமுகரான இவர் தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருடைய மனைவி அய்யம்மாள் பெருவங்கூர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவருடைய மகன்
Thats Tamil , 21 March, 2023

பட்டாசு ஆலை தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: பட்டாசு ஆலைகளை கண்காணித்து தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இனியும் இது போன்ற வெடி விபத்துகள் நடக்காமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Dinakaran , 22 March, 2023

காலநிலை மாற்ற சவால்கள்: வளிமண்டலத்தில் இருந்து கரியமில வாயுவை நீக்க முடியுமா?

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வளிமண்டலத்தில் கலந்துள்ள கார்பனை உறிஞ்சி வெளியே எடுக்க வேண்டியிருப்பதாக ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச குழு தெரிவித்துள்ளது. கார்பன்-டை-ஆக்சைடு நீக்கம் என்றால் என்ன? அதை எவ்வாறு சாத்தியப்படுத்துவது?
BBC , 24 March, 2023

Anderson reclaims No. 1 spot in Test bowling rankings; Hasaranga at top in T20Is

The England veteran is the oldest man to top the charts since Clarrie Grimmett in 1936
ESPN Cricinfo , 23 March, 2023

ஆதாமிடம் சமவுரிமை கேட்ட லிலித் யார்? பாபிலோன் முதல் பைபிள்வரை உள்ள தகவல்கள்

"நான் கீழே படுக்க மாட்டேன், ஏனென்றால் நான் மேல் நிலையில் இருக்கும்போது நீ கீழ் நிலையில் இருக்க மட்டுமே தகுதியானவள்."
BBC , 24 March, 2023

அண்ணாமலையார் கோயிலில் கத்தியுடன் நுழைந்த இளைஞர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கத்தியுடன் நுழைந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகாவை சேர்ந்த அப்பு என்ற இளைஞர் கோயிலில் கத்தியுடன் புகுந்து அலுவலக கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்.
Dinakaran , 22 March, 2023

நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருக்கு இழப்பீடு வழங்காததால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏல அறிவிப்பு நோட்டீஸ்

விருதுநகர்: நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருக்கு இழப்பீடு வழங்காததால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏல அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ரூ.2.35 கோடி இழப்பீட்டை நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருக்கு வழங்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏல அறிவிப்பு நோட்டீஸை விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள் ஓட்டினார்.
Dinakaran , 21 March, 2023

"இரும்பு கம்பியால் ரத்தம் வரும் வரை அடித்தனர்" - சாதி மறுப்பு திருமணங்கள் தமிழ்நாட்டில் இன்றும் ஏற்க மறுக்கப்படுவது ஏன்?

கீர்த்தியின் வீட்டிலிருந்து அவர் சென்றபோது செளந்தர் மற்றும் அவரின் பெற்றோர் அமர்ந்திருந்த நாற்காலிகளை வெளியே வீசச் சொன்னார் கீர்த்தியின் தந்தை. அவர்கள் வாங்கி வந்த பழங்கள், இனிப்புகள், பூ என அனைத்தும் குப்பையில் வீசப்பட்டன.
BBC , 22 March, 2023

Kane Williamson and Mitchell Starc in the top three in ICC rankings

The NZ batter rose up the Test batters list, the Australia bowler rose up the ODI bowlers list
ESPN Cricinfo , 23 March, 2023

ICC rankings: Richa Ghosh, Amelia Kerr and Muneeba Ali reach career-best numbers

Renuka Singh's five-for against England lifted her to No. 5 among bowlers, as Lea Tahuhu moved from tenth to seventh
ESPN Cricinfo , 22 March, 2023

புதுக்கோட்டை வேங்கைவயல் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க ஐகோர்ட் முடிவு

சென்னை: புதுக்கோட்டை வேங்கைவயல் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்து குறித்து சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Dinakaran , 21 March, 2023

"குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செப்.15 முதல் தொடங்கும்"

தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1,000 வழங்கப்படும். செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்தத் தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.
BBC , 21 March, 2023

தென்காசியிலும் “அசிங்கம்”.. மேலும் ஒரு பாதிரியார் கைது! பெண்களை சீண்டிய ஸ்டான்லி சிக்கியது எப்படி?

தென்காசி: கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் தன்னை நாடி தேவாலயத்துக்கு வரும் பெண்கள், கல்லூரி மாணவிகளை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆலங்குளத்தில் மேலும் ஒரு பாதிரியார் பாலியல் வழக்கில் கைதாகி இருக்கிறார். கன்னியாகுமரி தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தவர் பெனெடிக் ஆண்டோ. கடந்த சில நாட்களுக்கு முன் அவரை
Thats Tamil , 22 March, 2023

தென்காசி அருகே உள்ள தேவாலயத்தில் பாதிரியார் மீது பாலியல் புகார்

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள தேவாலயத்தில் பாதிரியார் ஸ்டான்லி குமார் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள சர்ச்சில் போதகராக இருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த ஸ்டான்லி குமார், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக சபை மக்கள் டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
Dinakaran , 21 March, 2023

அம்ரித்பால் சிங்: சந்தேகம் எழுப்பும் பஞ்சாப் போலீஸ் - இதுவரை நடந்தவை என்ன?

"அம்ரிபால் சிங் தொடர்புடைய வன்முறை விவகாரத்தில் இதுவரை 114 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். இதில் வன்முறை நடந்த முதல் நாளிலேயே 78 பேரை போலீஸார் பிடித்தனர். இரண்டாம் நாளில் 34 பேரும் மூன்றாம் நாளில் 2 பேரும் பிடிபட்டனர். அனைவரும் மாநிலத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர்கள்," என்று காவல்துறை ஐ.ஜி கில் தெரிவித்தார்.
BBC , 21 March, 2023

'அரசை விமர்சிப்பவர்கள் குறிவைக்கப்படுகின்றனர்': இந்தியா குறித்து அமெரிக்கா வெளியிட்ட மனித உரிமை அறிக்கை

"அரசியல் கைதிகள் மனம் போனபடி தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள், ஊடகங்கள் மீது அரசு தடைகளை விதிக்கிறது. "
BBC , 23 March, 2023

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில்  மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.
Dinakaran , 24 March, 2023

2023 Asia Cup likely in Pakistan and one other overseas venue for India games

Neutral venue not confirmed but the UAE, Oman, Sri Lanka and even England are potential contenders
ESPN Cricinfo , 24 March, 2023

படிக்காமல் நீண்ட நேரம் கேம் விளையாடிய மகன்.. \"அருணாசல பட ஸ்டைலில் தண்டனை கொடுத்த தந்தை\"

பீஜிங்: சீனாவில் படிக்காமல் நீண்ட நேரம் செல்போனில் கேம் விளையாடிய மகனை விடிய விடிய சுமார் 17 மணி நேரம் தூங்க விடாமல் கேம் விளையாட வைத்து அவனது தந்தை நூதன தண்டனை அளித்துள்ளார். அருணாச்சலம் திரைப்படத்தில் பீடி குடிக்கும் பழக்கம் போக வேண்டும் என்பதற்காக மகன் ரஜினிகாந்துக்கு பண்டல் பண்டலாக பீடி வாங்கி கொடுத்தது போல்
Thats Tamil , 21 March, 2023

Rohit on player workloads during IPL: 'Up to the franchises now'

India captain says the team management has given the IPL franchises some instructions about workloads
ESPN Cricinfo , 23 March, 2023

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா..83 பேர் பாதிப்பு..லாக்டவுன் மீண்டும் வருமா?

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 83ஆக பதிவாகி உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 480 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் லாக்டவுன் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான
Thats Tamil , 23 March, 2023

புதுச்சேரியில் ஒரேநாளில் 8 பேருக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரேநாளில் 8 பேருக்கு கொரோனா, 7 பேருக்கு டெங்கு, 12 பேருக்கு இன்ஃபுளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா, டெங்கு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட 27 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Dinakaran , 21 March, 2023

தோழனிடம் இருந்து நாரையை பிரித்த உ.பி. அரசு - என்ன நடந்தது?

நாரை பறிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக அரசை விமர்சித்த அகிலேஷ் யாதவ், அரசு நாரையை பறிக்கிறது என்றால், மயிலுக்கு உணவளித்துக் கொண்டிருப்பவர்களிடம் இருந்து மயிலையும் அரசு பறிக்க வேண்டும். அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அங்கு செல்ல தைரியம் உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
BBC , 23 March, 2023

ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோருவோம்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

டெல்லி: ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோருவோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்ய எல்லா வழிகளிலும் பாஜக முயன்றதாக கார்கே குற்றச்சாட்டியுள்ளார். தேவைப்பட்டால் ஜன நாயகத்தை காக்க சிறைக்கும் செல்வோம் என அவர் தெரிவித்தார்.
Dinakaran , 24 March, 2023

ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது கடும் கண்டனத்துக்குரியது - முத்தரசன்

சென்னை: ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது கடும் கண்டனத்துக்குரியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்கு வேறு எந்தக் காரணமும் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கருத்துக் கூறினால், அவர்களின் பதவியை குறி வைத்து பாஜக அரசு நடவடிக்கை எடுப்பதாக முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Dinakaran , 24 March, 2023

வாய்ச்சொல் வீரம்.. திமுக அரசால் தமிழ்நாட்டின் தள்ளாட்டத்தை நிறுத்தமுடியாது.. லிஸ்ட் போட்ட அண்ணாமலை!

சென்னை : கண்களுக்கு மட்டும் விருந்தாகும் கானல் நீர் போல, அறிவிப்பு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த கண்காட்சி பட்ஜெட்டால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சி, கடன் சுமையை மேலும் அதிகரித்து சாதனை படைத்திருக்கிறது. நாடகம் போட்டு வாய்ச்சொல் வீரம் காட்டுவதன் மூலம், தமிழ்நாட்டின் தள்ளாட்டத்தை நிறுத்த முடியாது என பாஜக
Thats Tamil , 23 March, 2023

போச்சு.. சுங்க கட்டணம் ரூ.55 உயர்வு.. அடிக்கடி ஏன் இப்படி.. அப்ப காய்கறி விலை உயருமே: டிடிவி தினகரன்

சென்னை: சுங்ககட்டணம் 55 ரூபாய் வரை உயர்த்த இருப்பதால் காய்கறி மற்றும் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அச்சம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 55 சுங்கச்சாவடிகளில், 29 சுங்கச்சாவடிகளில் வரும் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயர்த்தப்படுவது வாகன ஓட்டிகளை
Thats Tamil , 23 March, 2023

மது நுகர்வோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைவு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

சென்னை: மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மது நுகர்வோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ. ரவி எழுப்பிய கேள்விக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். கடந்த கொரோனா காலத்தில் மது நுகர்வோர் எண்ணிக்கையில் வீழ்ச்சிதான் இருந்தது. மது விற்பனை மூலம் கடந்த ஆண்டு ரூ.32,000 கோடியும் இந்த ஆண்டு ரூ.45,000 கோடியும் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. தற்போதும் மது நுகர்வோர் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளதே தவிர அதிகமாகவில்லை எனவும் கூறினார்.
Dinakaran , 23 March, 2023

கனிமொழியை சந்தித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன்! எதற்காக இந்த திடீர் மீட்டிங்? என்ன பின்னணி?

சென்னை: திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இந்தச் சந்திப்பின் போது அரசியல் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்பதும் தனிப்பட்ட முறையிலான சந்திப்பும் என்பதும் கவனிக்கத்தக்கது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன்
Thats Tamil , 24 March, 2023

புதுச்சேரி அரசு துறைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு துறைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களின் ஊதியம் ரூ.10,000-ல் இருந்து ரூ.15,000-ஆக உயர்த்தப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
Dinakaran , 21 March, 2023

Lyon, Head give Australia edge in one-innings shootout

India's lower order came to the party again with Axar scoring 74
ESPN Cricinfo , 20 March, 2023

புலம்பெயர் தொழிலாளர் பற்றி வதந்தி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி மீதான வழக்கு விவரங்களை அளிக்க காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புலம்பெயர் தொழிலாளர் பற்றி வதந்தி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி மீதான வழக்கு விவரங்களை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உ.பி. பாஜக செய்தித்தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தர உயர்நீதிமன்றம் ஒருவாரம் கால அவகாசம் வழங்கியுள்ளது. வதந்தி பரப்பியது தொடர்பாக தூத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களில் பிரசாந்த் உம்ராவ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
Dinakaran , 21 March, 2023

தமிழகத்தில் 2,761 யானைகள் உட்பட நாட்டில் 29,964 யானைகள் உள்ளன. ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: தமிழகத்தில் 2,761 யானைகள் உட்பட நாட்டில் 29,964 யானைகள் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் யானைகள் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அஷ்வினி குமாரி செளபே பதில் அளித்துள்ளார். 2019 - 2022 காலகட்டத்தில் 274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
Dinakaran , 20 March, 2023

மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா? அதனை சட்டம் இயற்றி நீக்க முடியுமா?

இந்தியாவில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யாத மாநிலங்கள் அனைத்திலுமே ஆளுநர்களின் தலையீடு, நிர்வாகத்தையே முடங்கச் செய்யும் அளவுக்குச் சென்றிருக்கிறது.
BBC , 22 March, 2023

கோவை ரயில் நிலையம் முன்பு 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்!

கோவை: கோவை ரயில் நிலையம் முன்பு 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார். அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Dinakaran , 23 March, 2023

கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியின்போது கடல் அலையில் சிக்கி மாணவர் மதனகோபால் உ யிரிழந்தார். மாணவர் மதனகோபால் உயிரிழந்த விவகாரத்தில் ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி தாய் சர்மிளா, சகோதரி வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Dinakaran , 23 March, 2023

'மோடி' பெயர் குறித்த விமர்சனம்: ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்- முழு விவரம்

'மோடி' பெயர் குறித்த விமர்சனம்: ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்- முழு விவரம்
BBC , 23 March, 2023

சிதம்பரம் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நிர்வாக அலுவலர் கைது

கடலூர்: சிதம்பரம் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பண்ணப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி கைது செய்யப்பட்டார். பட்டா மாற்றம் செய்ய சுரேஷிடம் லஞ்சம் வாங்கியபோது புகழேந்தியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
Dinakaran , 24 March, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  
Dinakaran , 20 March, 2023

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்:மீண்டும் நிறைவேற்றிய தமிழ்நாடு சட்டப்பேரவை

ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்யும் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்பாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் சட்டத்தை நிறைவேற்றி அனுப்பியிருக்கிறது தமிழ்நாடு அரசு.
BBC , 24 March, 2023

பாஜக மாநில நிர்வாகி சிவந்தி நாராயணன் கோவில்பட்டி வீட்டில் அமலாக்கப் பிரிவு அதிரடி ரெய்டு!

கோவில்பட்டி: தமிழ்நாடு பாஜகவின் மாநில பட்டியல் அணி பிரிவு பொதுச்செயலாளர் சிவந்தி நாராயணன் வீட்டில் இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் திடீரென சோதனை நடத்திய்து பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய விசாரணை ஏஜென்சிகளான அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்டவற்றை தங்களை பழிவாங்க மத்திய பாஜக அரசு பயன்படுத்துகிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள்
Thats Tamil , 23 March, 2023

சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு முறையாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிப்பு: ஒன்றிய அரசு

டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு முறையாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நிராகரித்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்துள்ளார். உயர் நீதிமன்றங்களில் ஆங்கிலத்தை தவிர மற்ற மொழிகளை பயன்படுத்த அனுமதி தொடர்பான பரிந்துரைகளின் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு இந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Dinakaran , 23 March, 2023

\"இந்துக்களுக்கு ஆபத்துனு சொல்லுவாங்க.. நம்பாதீங்க..\" ராமர் பற்றியும் பரூக் அப்துல்லா சொன்ன கருத்து

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இது குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு 2019ஆம் ஆண்டு ரத்து செய்தது. இதன் காரணமாகக் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து
Thats Tamil , 24 March, 2023

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடியில் மழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dinakaran , 20 March, 2023

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றம்: முதலமைச்சர் பேசியது என்ன?

ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்யும் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்பாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் சட்டத்தை நிறைவேற்றி அனுப்பியிருக்கிறது தமிழ்நாடு அரசு.
BBC , 23 March, 2023

வீட்டில் பெண்கள் செய்யும் வேலைகளைக் கணக்கிட்டபோது, கிடைத்த 'அதிர்ச்சி' விவரம்- என்ன தெரியுமா?

குடும்பத்துப் பெண்களிடம், வீட்டில் அவர்கள் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் வெவ்வேறு வண்ணங்களில் ஒரு காகிதம் அளிக்கப்பட்டது. அவர்கள் அந்த வேலையை வெளியில் சென்று செய்தால், என்ன மதிப்பு இருக்குமோ, அந்த மதிப்பு அந்த காகிதத்திற்கு அளிக்கப்பட்டது.
BBC , 21 March, 2023

என் புருஷன நீதான் லவ் பண்றீயா.. கொடைக்கானலில் கல்லூரி மாணவியை தாக்கிய மனைவி.. சட்டென நடந்த விபரீதம்

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கார் டிரைவருடனான காதலை கண்டித்து தாக்குதல் நடத்தியதால் மனம் உடைந்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சி நாயக்கன்பட்டி அருகே உள்ள கிராமம் குரும்பபட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல். அவருடைய மகள் விஜயஸ்ரீ வயது 19.
Thats Tamil , 21 March, 2023

நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த.. 12 புதுக்கோட்டை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!

சென்னை: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். வானிலை காரணமாக எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஒரு பக்கம் என்றால் இலங்கை கடற்படையினர் மற்றொரு பக்கம் சிக்கலாக உள்ளனர்.
Thats Tamil , 23 March, 2023

டெல்லி மதுபானக் கொள்ளை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்.5 வரை நீதிமன்றக் காவல்

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்ளை முறைகேடு புகார் தொடர்பாக வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைக் காவல் முடிந்த நிலையில் சிசோடியவை அமலாக்கப் பிரிவு டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. விசாரணைக் காவல் முடிந்ததை அடுத்து நீதிமன்றக் காவலில் சிசோடியவை சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 
Dinakaran , 22 March, 2023

ஆதி திராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையின் கீழ் கொண்டு வர எதிர்ப்பு ஏன்?

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பிற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்திருக்கின்றன. ஆனால், கல்வித் தரத்தை உயர்த்தும்பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு கூறுகிறது.
BBC , 23 March, 2023

"கோவை குணாவை பற்றி தவறாக பேசுவது வருத்தமளிக்கிறது" - மதுரை முத்து

பன்முக தன்மையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கோவை குணா பெயரில் விருது வழங்க வேண்டும்
BBC , 22 March, 2023

Harmanpreet: India need to address high dot-ball count

Captain wants more proactivity in likely semi-final showdown with Australia
ESPN Cricinfo , 22 March, 2023

ஆழித்தேரோட்டத்தையொட்டி திருச்சி - திருவாரூக்கு ஏப்ரல் 1-ம் தேதி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்

திருச்சி: ஆழித்தேரோட்டத்தையொட்டி திருச்சி - திருவாரூக்கு ஏப்ரல் 1-ம் தேதி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சியில் காலை 9.20-க்கு புறப்படும் ரயில் திருவாரூரை காலை 11.40 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dinakaran , 22 March, 2023

வெளிநாடுகளில் பங்களாக்கள்.. மலைக்க வைக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் சொத்து மதிப்பு

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ரூ.571 கோடி சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்த நிலையில், அதில் நடித்த ஜூனியர் என்டிஆர் உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில்
Thats Tamil , 24 March, 2023

Nat Sciver-Brunt leads England past India despite Renuka Singh five-for

Renuka's career-best haul and good knocks from Smriti Mandhana and Richa Ghosh fail to prevent England from closing in on semi-final spot
ESPN Cricinfo , 20 March, 2023

கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்: இந்து சமய அறநிலையத்துறை

சென்னை: கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் 23 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
Dinakaran , 23 March, 2023

காலணியில் கலை வண்ணம் கண்டு அசத்தும் ஹரியாணா பெண்

ஹரியாணா மாநிலம் சோனிபத்தை சேர்ந்த பிரதிபா அன்றில் காலணிகளில் கலை வண்ணம் கண்டு அசத்துகிறார். ஆன்லைனில் கடை விரித்த அவர், இன்று 19 நாடுகளுக்கு தனது தயாரிப்புகளை அனுப்புகிறார்.
BBC , 23 March, 2023

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையால் பறிபோன எம்பி பதவி - அடுத்து என்ன நடக்கும்?

கிரிமினல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, 2 ஆண்டுகள் வரை தண்டனை பெறும் நபர்கள் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் என மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறுகிறது. வயநாடு தொகுதியில் மீண்டும் தேர்தல் நடக்குமா?
BBC , 24 March, 2023

முல்லை பெரியாறு அணை தொடர்பாக பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டத்தை மார்ச் 28-ல் நடத்த முடிவு

டெல்லி: முல்லை பெரியாறு அணை தொடர்பாக பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டத்தை மார்ச் 28-ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய நீர்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கேரள, தமிழக அரசுகளுக்கு கடந்த ஜனவரி 12-ல் அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழு தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார். அணை பாதுகாப்பு தொடர்பான 16-வது கூட்டத்தை கூட்ட ஏதுவாக தேதிகளை அளிக்குமாறு கடிதத்தில் கோரியிருந்தார்.
Dinakaran , 20 March, 2023

எவ்வளவு பேருக்கு ரூ.1000 உரிமைத் தொகை?: அமைச்சர் கீதாஜீவன் பதில்

சென்னை: ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் மகளிர் பயன்பெற முடியாது என சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 80 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பயனடைய வாய்ப்புள்ளது. இந்த நிதியாண்டில் 6 மாதமே உள்ளதால்தான் திட்டத்துக்கு 7ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
Dinakaran , 20 March, 2023

India retain Border-Gavaskar Trophy after Australia lose nine wickets in a session

Jadeja took career-best figures of 7 for 42 as India won the second Test inside three days in Delhi
ESPN Cricinfo , 20 March, 2023

துயரமான நாள்..ராகுல்காந்தியை பார்த்து பயம்..மோடி அரசை வீழ்த்த மீண்டு வருவார்.. ஜோதிமணி ஆவேசம்

சென்னை: ராகுல்காந்தியைப் பார்த்து மத்திய அரசு பயந்து விட்டதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார். லோக்சபாவிற்கு வரக்கூடாது என்பதற்காக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஜோதிமணி, மோடி அரசை வீழ்த்த ராகுல்காந்தி மீண்டு வருவார் என்றும் கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கு எதிரான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர்
Thats Tamil , 24 March, 2023

ஒரே நாளில் மாறிய வாழ்க்கை, கடனாவாவது வச்சுக்கோ..அதிர்ஷ்டத்தை கையில் திணித்த தேவதை.. சூப்பர் ஜாக்பாட்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கடனுக்கு வாங்கிய லாட்டரிக்கு ரூ.75 லட்சம் பரிசு விழுந்துள்ளது.. சுமை தூக்கும் தொழிலாளியை தேடி அதிர்ஷ்டம் வந்துள்ளது. இதனால் அவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் யாருக்கு வரும், எப்படி வரும்னு யாருக்குமே தெரியாது. ஆனால் ரஜினி படத்தில் சொல்வது போல் வரவேண்டிய நேரத்தில் கரெக்டாக வரும். எல்லாருக்குமே வாழ்க்கையில் ஜெயிக்க நல்ல
Thats Tamil , 23 March, 2023

ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

தேனி ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டில் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை சாலையில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடுவதாக தகவல் கிடைக்கப்பெற்றது. இதன் பேரில் நடைபெற்ற சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
Dinakaran , 21 March, 2023

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு: ஐகோர்ட் கிளையில் போலீஸ் தகவல்

மதுரை: ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு என ஐகோர்ட் கிளையில் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dinakaran , 20 March, 2023

Kapp's passion burns bright as Delhi Capitals steamroll Mumbai Indians

The South African allrounder made a crucial contribution in a nine-wicket victory
ESPN Cricinfo , 21 March, 2023

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.6,500: ஆளுநர் ஒப்புதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை 6,500 ரூபாயாக உயர்த்திய கோப்பிற்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். ரூ.5,500ஆக இருந்த மீன்பிடி தடைக்கால நிவாரணம் கூடுதலாக ரூ.1,000 உயர்த்தப்பட்டு ரூ.6,500ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பேரிடர் கால நிதியுதவி ரூ.2,500ல் இருந்து ரூ.3,000ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என்ற அமைச்சரவை கோப்பிற்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
Dinakaran , 23 March, 2023

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கல்லூரி மாணவர் கொலை; போலீசார் விசாரணை..!!

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே பைக்கில் சென்ற 2 மாணவர்களை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்கியதில் ஒருவர் பலியானார். கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த மாணவர் வாசுதேவன் மேலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொட்டாம்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Dinakaran , 20 March, 2023

\"அதிமுக யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும்..\" வந்து விழுந்த கேள்வி? சசிகலா பதில் இதுதான்

நாகை: மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளது. மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசும் இடம் சட்டசபை. எனவே, மக்கள் பிரச்சினைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏக்கள் தாராளமாக பேசலாம் என்று சசிகலா கூறினார். திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சசிகலா நாகை வருகை தந்தார். வேளாங்கண்ணியில் உள்ள சொகுசு விடுதியில் தனது உறவினர்களோடு
Thats Tamil , 24 March, 2023

அதானி ஓவர்.. ஹிண்டன்பர்க் அடுத்து வெளியிடும் புது ரிப்போர்ட்! எந்த நிறுவனம் தெரியுமா! பரபர தகவல்

டெல்லி: அதானி நிறுவனம் குறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு முக்கிய ஆய்வறிக்கை வெளியாகவுள்ளது. குஜராத்தைச் சேர்ந்து முக்கிய தொழிலதிபர் கவுதம் அதானி.. இவர் மின்சாரம், ஏர்போர்ட், துறைமுகம் என்று பல்வேறு துறைகளில் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக மின்னல் வேகத்தில்
Thats Tamil , 23 March, 2023

ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன் சென்னை பல்லாவரம் நகராட்சியில் ஆணையராக இருந்து போது முறைகேடு செய்ததாக சிவக்குமார் மீது எழுந்த புகாரின் பேரில் சென்னையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர்.
Dinakaran , 21 March, 2023

'அரசை விமர்சிப்பவர்கள் இலக்காகிறார்கள்': அமெரிக்க மனித உரிமை அறிக்கை

"அரசியல் கைதிகள் மனம் போனபடி தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள், ஊடகங்கள் மீது அரசு தடைகளை விதிக்கிறது. "
BBC , 24 March, 2023

'I perform well when I enjoy myself' - Renuka sticks to her strengths to create a stir

"She bowled really well with the new ball and that's something batters will look at in case we come up against India again," says Sophie Ecclestone
ESPN Cricinfo , 20 March, 2023

இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்

சென்னை: இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய இடையே  3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
Dinakaran , 22 March, 2023

“கோழிக் கால் சாப்பிடுங்கள்” என மக்களிடம் இந்த அரசாங்கம் ஏன் சொல்கிறது?

நாய், பூனைகளுக்கு உணவாகத் தூக்கி எறியப்படும் கோழிக்கால்களில் புரதச் சத்து அதிகம் உள்ளதால் அவற்றை சமைத்து உண்ண வேண்டும் என எகிப்து அரசு கூறுகிறது
BBC , 21 March, 2023

திலகர் பெண்களும், பிராமணர் அல்லாதோரும் கல்வி கற்பதை எதிர்த்தாரா?

1881ல் பத்திரிகையாளராக தமது தொழிலைத் தொடங்கிய திலகர் 3 முரண்பட்ட விஷயங்களில் ஈடுபாடு காட்டினார். கார்ல் மார்க்ஸ் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு பிரிட்டிஷ் பத்திரிகையியில் வெளியான அவரது கட்டுரையை மறுபிரசுரம் செய்தார். வட்டி முதலாளிகள் விவசாயிகளின் சிறு உடமைகளை பறிமுதல் செய்வதை தடை செய்யும் சட்டத்தை எதிர்த்தார், சாதி அமைப்பை ஆதரித்தார்.
BBC , 21 March, 2023

மனைவி குளிப்பதை எட்டி பார்த்த நண்பர்.. மது குடிக்க வைத்து தீர்த்து கட்டிய கணவன்.. பரபரத்த தென்காசி

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மனைவி குளிப்பதை எட்டிப்பார்த்த நபரை மது குடிக்க அழைத்து சென்று கட்டையால் அடித்து கொன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த கட்டளைக் குடியிருப்பு பகுதியை சேர்ந்த நபர் ஐயப்பன். திருமணமானவர். ஐயப்பனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக
Thats Tamil , 22 March, 2023

வரதட்சணைதான் கொடுக்கிறோமே.. மகளுக்கு பரம்பரை சொத்தில் உரிமை உள்ளதா? மும்பை ஹைகோர்ட் முக்கிய தீர்ப்பு

கோவா: திருமணத்தின் போது மகளுக்கு வரதட்சணை வழங்கப்பட்டால் குடும்பச் சொத்தில் மகளுக்கு உரிமை இருக்கிறதா என்பது குறித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. மும்பை உயர் நீதிமன்ற கோவா கிளையில் குடும்ப சொத்தில் மகளுக்குப் பங்கு தருவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. நான்கு சகோதரிகள் மற்றும் நான்கு சகோதரர்கள்
Thats Tamil , 23 March, 2023

\"உன் வெயிட்டிற்கு எல்லாம் உடையாது..\" சொன்ன அடுத்த நொடி விபரீதம்.. ரீல்ஸ் எடுத்த இளைஞர் பரிதாபமாக பலி

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவிட வீடியோ எடுத்த நபர் ஒருவர் பழைய கட்டிடத்தின் மேலே இருந்து கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நவீன உலகில் அனைத்துமே இணையத்தைச் சுற்றியே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அதிக லைக்ஸ்களை அள்ள வேண்டும் என்பதையே இந்தக் காலத்தில் இளைஞர்கள் குறியாக வைத்து வருகின்றனர்.
Thats Tamil , 20 March, 2023

சென்னை கோவை இடையே வந்தாச்சு வந்தே பாரத் ரயில்.. எப்போது தொடங்கும்! பயண நேரம் எவ்வளவு! முழு விவரம்

சென்னை: தலைநகர் சென்னைக்கும் கோவைக்கும் இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதை பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைக்க உள்ளார். உலகிலேயே மிக பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக இந்திய ரயில்வே இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய ரயில்வே பல நவீன மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து வருகிறது.
Thats Tamil , 23 March, 2023

இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடத்த அனுமதி கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அர்ஜுன் சம்பத் வலியுறுத்தி வரும் நிலையில் எதிர்பாளர்களுடன் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த வசந்தகுமார் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Dinakaran , 20 March, 2023

2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு

டெல்லி: மக்களவை எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவதூறு பேச்சு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பதையடுத்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மோடி என பெயர்கொண்டவர்கள் பற்றி அவதூறாக பேசியதால் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்திருந்தது.
Dinakaran , 24 March, 2023

காலில் ரத்தம் சொட்டச் சொட்ட சாதனை படைத்த மெஸ்ஸி - ஆர்ப்பரித்த அர்ஜென்டினா ரசிகர்கள்

சர்வதேச போட்டிகளில் 800 கோல்கள் அடித்து சாதனை படைத்து இருக்கிறார் மெஸ்ஸி. ஆனால் ரொனால்வோ மிஞ்ச அவருக்கு இன்னும் எத்தனை கோல் தேவைப்படுகிறது?
BBC , 24 March, 2023

இதுதான் எழுச்சி.. 7ம் ஆண்டில் நுழையும் உ.பி. பாஜக.. பெண்கள் பைக் பேரணியை தொடங்கி வைத்து பூரித்த யோகி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்து 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதனை கொண்டாடும் விதமாக பெண்கள் பைக் பேரணி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடக்கி வைத்திருக்கிறார். உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று நேற்றுடன்(மார்ச் 22) 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதற்கு முன்னர் இருந்த முதலமைச்சர்கள் இவரை
Thats Tamil , 23 March, 2023

India almost through to World Test Championship final after beating Australia in Delhi

India and Australia are the favourites to qualify for the second World Test Championship final at The Oval from June 7 to 11
ESPN Cricinfo , 20 March, 2023

'100 நாள் வேலை திட்டத்தை மோதி அரசு திரிசூலம் கொண்டு தாக்குகிறது' - தமிழக அரசின் பொருளாதார ஆலோசகர் ஏன் இப்படி கூறினார்?

"100 நாள் வேலை விஷயத்தில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினால், அவர்கள் மீது சிபிஐ, வருமான வரி, அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்," என்கிறார் ஜீன் ட்ரேஸ்.
BBC , 22 March, 2023

Can the batters fight back in spin-friendly Chennai?

The fast bowlers have dominated the series so far but it is likely to be less seam-friendly in the series decider
ESPN Cricinfo , 22 March, 2023

காஞ்சிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகைகள் கொள்ளை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சத்தியமூர்த்தி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து நகைகளுடன் 5 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.5.50 லட்சம் திருடப்பட்டுள்ளது. குடும்பத்துடன் சத்தியமூர்த்தி வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
Dinakaran , 21 March, 2023

காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தால் பதற்றம்.. கனடாவில் இந்திய தூதர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து

வாஷிங்டன்: அம்ரித்பால் சிங்கிற்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து வெளிநாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கனடாவில் இந்திய தூதர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் உள்ளார். 2021 ஆம் ஆண்டு இந்த அமைப்பின் தலைவராக
Thats Tamil , 22 March, 2023

மந்தைவெளி மேற்கு வட்ட சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் பெயர்..அரசாணை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி

சென்னை: தமிழ்த் திரையுலகின பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டு விழாவை ஒட்டி, அவர் வாழ்ந்த வீடு அமைந்த சென்னை மந்தவெளி மேற்கு வட்டச் சாலைக்கு 'டி.எம்.சவுந்தரராஜன் சாலை' என்ற பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சூட்டுகிறார். இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் முதல்வருக்கு டி.எம்.சவுந்தரராஜன் மகன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் தலைசிறந்த பின்னணி பாடகர்
Thats Tamil , 23 March, 2023

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஈபிஎஸ் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிப்பு..!!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஈபிஎஸ் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்வை நடத்தும் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
Dinakaran , 20 March, 2023

இந்திய அணி சொதப்பியது எங்கே? தோல்விக்கு என்ன காரணம்?

இந்திய அணி சொதப்பியது எங்கே? தோல்விக்கு என்ன காரணம்?
BBC , 23 March, 2023

ஜெ. மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை ஆய்வில் உள்ளது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சுகாதாரத்துறை ஆய்வில் உள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆறுமுகசாமி அறிக்கை அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது.
Dinakaran , 20 March, 2023

செங்கல்பட்டு பாஜக பெண் நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்

செங்கல்பட்டு: பீர்க்கன்கரணையில் பா.ஜ.க. பெண் நிர்வாகிகள் 100 பேர், அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். செங்கல்பட்டு மாவட்ட பாஜக துணைத் தலைவர் கங்காதேவி சங்கர் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் நிர்வாகிகள் இணைவது தொடர்வதால் அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் தொடர்கிறது.
Dinakaran , 21 March, 2023

Zampa and Co stifle India to take series 2-1

Australia snapped India's four-year unbeaten streak in home ODIs with a thrilling win in Chennai
ESPN Cricinfo , 23 March, 2023

ச்சீ.. சொகுசு வாழ்க்கைக்காக இப்படியா? இன்ஸ்ட்டா பிரபலத்தை தூக்கிய போலீஸ்.. என்னாச்சு? யார் இவர்?

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடு புகுந்து நகை, பணத்தை திருடிய வழக்கில் இன்ஸ்ட்டாகிராம் பிரபலமான இளம்பெண் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வீட்டில் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ய ரீல்ஸ் எடுத்து கொண்டிருந்தபோது அவர் போலீசில் சிக்கினார். அவரிடம் போலீஸ் விசாரணை நடத்திய நிலையில் திருட்டு தொடர்பாக அவர் கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில்
Thats Tamil , 24 March, 2023

டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பாதுகாப்பை விலக்கியது ஒன்றிய அரசு

டெல்லி: டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் முன்பு போடப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதர் இல்லம் முன்பு போடப்பட்ட பாதுகாப்பையும் விலக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. லண்டனில் இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். லண்டனில் இந்திய தூதரகத்துக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பாதுகாப்பு வாபஸ் செய்யப்பட்டுள்ளது.
Dinakaran , 22 March, 2023

கொரோனா காலத்திலும் காஷ்மீர் ஆப்பிள்களை உலகம் முழுக்க கொண்டு சேர்த்த இளைஞர்கள்

ரியாலிட்டி ஷோவில் நிதி திரட்டி காஷ்மீர் ஆப்பிள்களை உலகம் முழுக்க கொண்டு சேர்த்த இளைஞர்கள். இப்படியும் தொழில் தொடங்க முடியுமா?
BBC , 24 March, 2023

110 balls of mayhem: how Australia were blown away in Delhi

Australia began the third day on 61 for 1; they were all out for 113 before lunch
ESPN Cricinfo , 20 March, 2023

பொள்ளாச்சி அருகே காகங்கள் வேட்டையாடப்பட்டது ஏன்? - எச்சரிக்கும் மருத்துவர்கள்

பொள்ளாச்சி அருகே காகங்களை வேட்டையாடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெண்படை நோய்க்கு மருந்தாகும் என்பதாலேயே வேட்டையாடியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அது உண்மையா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
BBC , 21 March, 2023

கொரோனா, H3N2 தொற்று பரவல் - அறிகுறிகளை வேறுபடுத்துவது எப்படி?

H3N2 இன்ஃப்ளூயன்சா காய்ச்சலும் தமிழ்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று, H3N2 வைரஸ் பாதிப்பு என இரண்டு தொற்றுகளுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால், இரண்டையும் வேறுபடுத்துவது சற்றே கடினமாகிறது.
BBC , 22 March, 2023

எதையும் எதிர்பார்க்க கூடாது.. எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும்.. அர்ஷ்தீப் சொன்ன தத்துவம்!

மொஹாலி: எதையும் எதிர்பார்க்காமல் எல்லாவற்றுக்கும் தயாராக இருப்பதே எனது வாழ்க்கை மந்திரம் என்று பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கிண்டல்களும், கேலிகளும் தொடங்கியுள்ளன. வழக்கம் போல் பஞ்சாப் அணிதான் அதிகமாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இம்முறை
Thats Tamil , 23 March, 2023

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மலைத் தேனீ கொட்டியதால் முதியவர் ஒருவர் உயிரிழப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மலைத் தேனீ கொட்டியதால் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மலை தேனீ கொட்டியதில் காயம் அடைந்த கல்லூரி மாணவிகள் உட்பட 13 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Dinakaran , 24 March, 2023

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: மாநிலத்துக்கு அதிகாரம் உண்டா இல்லையா? மத்திய அமைச்சர் சொன்ன முழு பதில் இதுதான்

மாநில ஆளுநர் தமிழ்நாடு அரசிடம் சுட்டிக்காட்டியதாக கூறப்படும் திறன் விளையாட்டு பற்றி குறிப்பிடும் அமைச்சர், கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிப்பை சுட்டிக்காட்டி ஆன்லைன் கேமிங் விவகாரத்தின் ஒழுங்குமுறை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்புடையது என்றும் தமது பதிலில் தெரிவித்துள்ளார்.
BBC , 22 March, 2023

ராகுலுக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம்- முழு விவரம்

ராகுலுக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம்- முழு விவரம்
BBC , 24 March, 2023

பாதுகாப்பு விலக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை: பிரிட்டன் தூதரகம்

லண்டன்: பாதுகாப்பு விலக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என பிரிட்டன் தூதரகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் பிரிட்டன் தூதரகம், தூதர் இல்லம் முன் வழக்கில் பாதுகாப்பு நீக்கப்பட்டது பற்றி தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.   
Dinakaran , 22 March, 2023

மத்தியில் 3வது அணி? அகிலேசுக்கு பின் நவீன் பட்நாயக்கை சந்தித்த மம்தா.. நடந்தது என்ன? திரும்பும் கை

புவனேஸ்வர்: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் இல்லாத கூட்டணி அமைக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரும்புகிறார். சமீபத்தில் அகிலேஷ் யாதவை சந்தித்து அவர் பேசிய நிலையில் தற்போது ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினார். இதனால் மத்தியில் 3வது அணி உருவாகிறதா? என்ற கேள்வி
Thats Tamil , 24 March, 2023

இந்தியாவில் விரைவில் 6ஜி தொலை தொடர்பு சேவை: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் 6ஜி தொலை தொடர்பு சேவைகளுக்கான சோதனை தொடங்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 2030க்குள் நாட்டில் 6ஜி சேவையை முழுமையாக செயல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Dinakaran , 23 March, 2023

“சர்பிரைஸ்”.. பிராமணரை ராஜஸ்தான் தலைவராக்கிய பாஜக! தேர்தலுக்கு இன்னும் 8 மாசம்தான் - பிளான் இதானா?

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் 8 மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் பாரதிய ஜனதா கட்சி, அம்மாநிலத்தின் புதிய தலைவராக சந்திர பிரகாஷ் ஜோஷியை நியமித்து உள்ளது. ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராக சதீஷ் பூனியா பதவி வகித்து வந்த நிலையில், சிட்டூர்கர்
Thats Tamil , 24 March, 2023

ரூ.1000 கோடி மோசடி வழக்கில் தஞ்சை ராஹத் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளருக்கு முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: ரூ.1000 கோடி மோசடி வழக்கில் 3 பேரின் முன்ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. தஞ்சை ராஹத் டிரான்ஸ்போர்ட் ரேஹானாபேகம்,உறவினர் அப்துல் கனி, மேலாளர் நாராயணசாமியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மனுதாரர்களிடம் போலீஸ் விசாரணை நடத்துவது அவசியம் என்பதால் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
Dinakaran , 22 March, 2023

கருணாநிதி நூற்றாண்டு விழா! இந்தியாவே திரும்பிப் பார்க்கணும்! 1 ஆண்டு திமுக நான் ஸ்டாப் கொண்டாட்டம்!

சென்னை: இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஜூன் 3 2023 முதல் ஜூன் 3 2024 வரை தொண்டர்களின் இல்ல விழாவாக - மக்கள் விழாவாக - கொள்கை விழாவாக கொண்டாட வேண்டும் என மாவட்டச்
Thats Tamil , 22 March, 2023

நாடு முழுவதும் 2017 -2021 ஆண்டுகளில், சுமார் 21.59 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளது

சென்னை: நாடு முழுவதும் 2017 -2021 ஆண்டுகளில், சுமார் 21.59 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில், 7,36,129 பேர் உயிரிழந்துள்ளனர். மக்களவையில் சாலை விபத்துகள் குறித்த கேள்விக்கு, சாலைப்போக்குவரத்து அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
Dinakaran , 23 March, 2023

இந்துத்துவம் பொய்களின் மீது கட்டமைக்கப்பட்டது என்று ட்வீட் செய்த கன்னட நடிகர் கைது

பெங்களூரு: இந்துத்துவம் பொய்களின் மீது கட்டமைக்கப்பட்டது” என்று ட்வீட் செய்த, கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சமத்துவம் என்ற உண்மையின் மூலமே இந்துத்துவத்தை வீழ்த்த முடியும் என்றும் அவர் தனது ட்வீட்டில் கூறியிருந்தார். இதற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
Dinakaran , 21 March, 2023

தந்தை சுப்பிரமணியம் மறைவை அடுத்து நடிகர் அஜீத்துக்கு நேரில் ஆறுதல் கூறினார் நடிகர் விஜய்

சென்னை: தந்தை சுப்பிரமணியம் மறைவை அடுத்து நடிகர் அஜீத்துக்கு நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜீத் இல்லத்திற்கு சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறினார்.
Dinakaran , 24 March, 2023

'ராம்ஜி நகர் திருடர்கள்': கொண்டை ஊசி, ஹேர்பின் மூலம் திருடும் கும்பல் - அதிர்ச்சி தரும் கைவரிசை மற்றும் பின்னணி

இந்தியாவில் நூற்றுக்கணக்கான காவல்நிலையங்களில் பல நூறு திருட்டு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளாக அறியப்படுபவர்கள்தான் ராம்ஜி நகர் கொள்ளையர்கள். இவர்களை தேடி பஞ்சாப், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து திருச்சி ராம்ஜி நகர் பகுதிக்கு விசாரணை அதிகாரிகள் வந்துசென்றுள்ளனர்.
BBC , 24 March, 2023

2026க்குப் பிறகு தொகுதிகள் அடுத்த மறு வரையறை செய்யப்படலாம்: ஒன்றிய அரசு விளக்கம்

டெல்லி: 2026க்குப் பிறகு தொகுதிகள் அடுத்த மறு வரையறை செய்யப்படலாம் என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்துள்ளார். தொகுதிகளின் எல்லைகளை மறு வடிவமைப்பு செய்வதில் மாநில அரசுகளுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
Dinakaran , 23 March, 2023

Mandhana's career-best powers India into semis

Ireland were five runs behind the DLS par score when rain forced an early end to the game
ESPN Cricinfo , 22 March, 2023

இதென்ன அதிசயம்! பிரதமர் மோடிக்கு நன்றி கூறி பேனர் வைத்த திமுக கிளைச் செயலாளர்! பெரம்பலூர் பஞ்சாயத்து

பெரம்பலூர்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து திமுக கிளைச் செயலாளர் ஒருவர் விளம்பர பேனர் வைத்துள்ள நிகழ்வு பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. பிரதமர் மோடி படம் மட்டுமல்ல கூடவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படத்தையும் அந்த பேனரில் போட்டு நன்றி கூறியிருக்கிறார் திமுக கிளைச் செயலாளர். இவருக்கு என்ன தான் ஆச்சு என அந்த கிளைக்கழக
Thats Tamil , 23 March, 2023

அடுத்த சக்கரத்தில் தேமுதிக உட்காரும்.. ஜெயலலிதா போல் குட்டி ஸ்டோரி சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!

ராணிப்பேட்டை: அடுத்த சக்கரத்தில் தேமுதிக உட்காரும் என கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயம். இங்கு தனது பிறந்தநாளையொட்டி தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் உள்ளாட்சி தேர்தல்
Thats Tamil , 21 March, 2023

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 7-வது நாளாக முடங்கியது

டெல்லி: எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி எம்பிக்களின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 7-வது நாளாக முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வில் ஒருநாள் கூட முழுமையாக அவை நடைபெறவில்லை.
Dinakaran , 21 March, 2023

அம்ரித்பால் சிங் வீட்டில் சோதனை நடத்தும் பஞ்சாப் போலீஸ் - அமிர்தசரஸில் பதற்றம்

இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வெளியிட்டுள்ள காணொளியில், "கடந்த காலங்களில் அந்நிய சக்திகளுடன் இணைந்து பஞ்சாப் சூழலை கெடுக்கும் வகையில் பேசிய சிலர், வெறுக்கத்தக்க பேச்சுக்களை பேசி, சட்டத்திற்கு விரோதமாக பேசி வந்தனர். அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும்," என்று கூறியுள்ளார்.
BBC , 23 March, 2023

உக்ரைனில் போர் நடத்தபோது ஒரு சிறிய சிராய்ப்பும் இல்லாமல் மாணவர்களை தமிழ்நாடு அழைத்து வந்தோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

சென்னை: உக்ரைனில் போர் நடத்தபோது ஒரு சிறிய சிராய்ப்பும் இல்லாமல் மாணவர்களை தமிழ்நாடு அழைத்து வந்தோம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
Dinakaran , 24 March, 2023

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 5 ஆண்டு சிறை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கவுண்டம்பட்டியில் 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மணிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.75,000 அபராதம் விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்ற நீதிபதி சத்யா உத்தரவிட்டுள்ளார்.
Dinakaran , 20 March, 2023

Unadkat: Ranji win 'a fitting tribute to one of Saurashtra's favourite sons' Pujara

Captain also says "this decade and era belongs to Saurashtra" following their second title in three seasons
ESPN Cricinfo , 21 March, 2023

ரிக்டரில் 7.7.. பாகிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்.. இடிந்த விழுந்த கட்டடங்கள்..பீதியில் உறைந்த மக்கள்

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு திடீரென்று 6.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆசியாவில் உள்ள இந்தியா உள்பட பல நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பாகிஸ்தானில் 7.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் பல இடங்களில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் விழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்து
Thats Tamil , 22 March, 2023

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு ஆலோசனை

டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு தொடர்பாக பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியுள்ள நிலையில் உயர்மட்ட ஆலோசனையை நடத்துகிறார்.
Dinakaran , 22 March, 2023

இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை.. இந்தியாவின் பலவீனம் இதுதானா?.. ரோகித் சர்மா கொடுத்த பதிலடி!

விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு இடதுகை பவுலர்களிடம் திணறுவது தான் என விமர்சனங்கள் குவிந்து வரும் சூழலில் கேப்டன் ரோகித் சர்மா கோபமடைந்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி கண்ட நிலையில்
Thats Tamil , 21 March, 2023

தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்.. \"திருமண உறவு என்றால் பாலியல் மட்டுமே இல்லை\".. சபாஷ் செல்வி!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே திருமணம் ஆக வேண்டிய வயதில் இருந்த மகன்கள் தன்னுடைய அம்மாவுக்கு மாப்பிள்ளை தேடி மறுமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த திருமணம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்வதை இன்றைய காலக்கட்டத்திலும் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். வெளிநாடுகளில் சர்வசாதாரணமாக பார்க்கப்படும் இந்த விஷயம், இங்கு மட்டும் விவாதப் பொருளாக பார்க்கப்படுகிறது.
Thats Tamil , 20 March, 2023

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தையை கடத்தி விற்பனை செய்த சித்த மருத்துவர் உள்பட 2 பேர் மீது குண்டாஸ்!

சென்னை: குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தையை கடத்தி விற்பனை செய்த சித்த மருத்துவர் உள்பட 2 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. குழந்தை விற்பனையில் ஈடுபட்ட சித்த மருத்துவர் மெகருன்னிசா, ஷீலா ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Dinakaran , 23 March, 2023

இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்கள் 28 பேரை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்கள் 28 பேரை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை என்று குறிப்பிட்டுள்ளார். 2023-ல் தற்போது வரை 28 தமிழ்நாடு மீனவர்களும், 4 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது.
Dinakaran , 23 March, 2023

'தமிழ்நாடு அரசு கடன் வாங்குவதை தவிர வேறு வழியில்லை' - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பேட்டி

நிர்மலா சீதாராமன் பேச்சையும் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் பேச்சையும் ஒப்பிட்டுப்பாருங்கள். புள்ளி விவரங்கள் மூலம் வித்தியாசம் தெரியும்.
BBC , 21 March, 2023

பாலியல் தொழிலாளியாக இருந்த திருநங்கை அலிஷா வாழ்க்கையில் நடந்த திடீர் மாற்றம்

ஆஷூ என்னும் தன் அடையாளத்தை எதிர்த்து அலிஷாவாக மாறி, திருநங்கை சமூகத்தினரிடையே வெற்றியாளராக மாறியது எப்படி? அலிஷாவின் உணர்ச்சி போராட்டத்தை விவரிக்கிறது இந்தச் செய்தி.
BBC , 20 March, 2023

இந்திய விடுதலைக்குப் பிறகும் அரசு தலித்துகளுக்கு பாஸ்போர்ட் வழங்காத வரலாறு

இந்திய உச்ச நீதிமன்றம், 1967 ஆம் ஆண்டு தனது தீர்ப்பு ஒன்றில், பாஸ்போர்ட் வைத்திருப்பதும், வெளிநாடு செல்வதும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்தது.
BBC , 22 March, 2023

நாட்டில் ரூ.500 நோட்டுகளை விட ரூ.2000 நோட்டுகள்தான் மக்களிடம் அதிக புழக்கம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

டெல்லி: நாட்டில் ரூ.500 நோட்டுகளை விட ரூ.2000 நோட்டுகள்தான் அதிக புழக்கத்தில் உள்ளன என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி கணக்கின்படி 27.05 லட்சம் கோடி அளவுக்கு ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன என நிர்மலா சீதாராமன் கூறினார்.
Dinakaran , 20 March, 2023

மேகாலயா சட்டசபையில் வெடித்த இந்தி எதிர்ப்பு போராட்டம்- ஆளுநரின் இந்தி உரைக்கு எதிராக வெளிநடப்பு!

ஷில்லாங்: மேகாலயா சட்டசபையில் இந்தி மொழியில் ஆளுநர் பாகு சவுகாரன் உரை வாசிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து 4 எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேகாலயா சட்டசபை தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து அதிக இடங்களைப் பெற்ற என்பிபி தலைமையில் பாஜக, சுயேட்சைகள் மற்றும் மாநில கட்சிகளை
Thats Tamil , 22 March, 2023

ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் 6வது நாளாக முடங்கியது..!!

டெல்லி: ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 6வது நாளாக முடங்கியது. ராகுல் காந்தி பேச்சு, அதானி விவகாரத்தை எழுப்பி இரு தரப்பும் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவைகள் முடங்கின.
Dinakaran , 20 March, 2023

ஐ.எம்.எஃப் தரும் ரூ. 24 ஆயிரம் கோடிக்கு பிறகு இலங்கையில் நிதி நெருக்கடி தீருமா?

நிதி நெருக்கடியால் திவால் நிலையை சந்தித்த இலங்கைக்கு ரூ.24,000 கோடி கடன் வழங்க ஐ.எம்.எஃப் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளுமா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
BBC , 22 March, 2023

குடிநீரின் வகைகள் எத்தனை தெரியுமா? - சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அருந்துவது ஆபத்தா?

சில கூறுகள் மற்றும் தாதுக்கள் தண்ணீரில் சேர்க்கப்படும்போது அல்லது குறைக்கப்படும்போது அந்த தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர், காய்ச்சி வடிகட்டிய குடிநீர், தாதுக்கள் கொண்ட தண்ணீர் என்று அழைக்கப்படுகிறது.
BBC , 22 March, 2023

சர்ச்சில் கேமரா.. பெண்களை படம்பிடித்து மார்பிங் செய்து பாலியல் உறவுக்கு அழைத்த போதகர்.. ஷாக் தகவல்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சர்ச்க்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மதபோதகர் ஸ்டான்லி குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையல் தான் அவர் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்ச்சில் சுழல் கேமராவில் பெண்களை படம்பிடித்து அதனை மார்பிங் செய்து பாலியல் இச்சைக்கு பெண்களை அழைத்து மிரட்டியது அதிர வைத்துள்ளது. கன்னியாகுமரி
Thats Tamil , 23 March, 2023

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஆலங்கட்டி மழை..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, மூலசமுத்திரம் தக்கா, வெள்ளையூர் உள்ளிட்ட இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இதேபோல் ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Dinakaran , 20 March, 2023

Starc's five-for, Marsh-Head century stand sink India for 1-1

Only four India batters reached double-figures after not having answers to Starc's swing and pace
ESPN Cricinfo , 20 March, 2023

தாம்பரம் புறவழிச்சாலையில், மழைக்காக இருசக்கர வாகனத்துடன் சாலையோரம் நின்ற காவலர் மீது அரசு பேருந்து மோதி உயிரிழப்பு!

சென்னை: தாம்பரம் புறவழிச்சாலையில், மழைக்காக இருசக்கர வாகனத்துடன் சாலையோரம் நின்ற காவலர் நாகராஜ் (29) மீது அரசு பேருந்து மோதியதில் காவலர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். பெங்களூரு - கோயம்பேடு அரசு பேருந்து ஓட்டுநர் காளிதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Dinakaran , 23 March, 2023

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா..தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் ஏகமனதாக நிறைவேறியது

சென்னை: பல உயிர்களை குடித்துள்ளது ஆன்லைன் ரம்மி. மனித உயிர்களை காக்க சட்டசபையில் ஆன்லைன் தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆன்லைன்
Thats Tamil , 23 March, 2023

செந்துறை அருகே உள்ள வரதராஜபெருமாள் கோயிலில் திருடப்பட்ட சிலை 11 வருடத்துக்கு பின் மீட்பு!

அரியலூர்: செந்துறை அருகே உள்ள வரதராஜபெருமாள் கோயிலில் திருடப்பட்ட சிலை 11 வருடத்துக்கு பின் மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் இருந்த ஆஞ்சநேயர் சிலை ஏலம் விடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
Dinakaran , 23 March, 2023

தமிழ்நாடு பட்ஜெட் 2023: "குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செப்.15 முதல் தொடங்கும்"

தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1,000 வழங்கப்படும். செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்தத் தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.
BBC , 20 March, 2023

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?

செம்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு நல்லது என்று நம்மில் பலர் கருதுகின்றனர். அப்படி செய்வது உண்மையிலேயே உடலுக்கு நன்மை தருகிறதா?
BBC , 20 March, 2023

அகநக முகநக பாடல்: குந்தவையின் இதயச் சிறையில் வந்தியத்தேவன் சிறைபட்ட கதை தெரியுமா?

குந்தவையின் தோழி வானதியை முதலையிடமிருந்து காப்பாற்ற நினைத்து வாளை உருவும் வந்தியத்தேவன், பிறகு அது பொம்மை முதலை என்பதை அறிந்து வெட்கமடைந்து செல்கிறான்.
BBC , 24 March, 2023

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலி 8ஆக அதிகரிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்டவெடிவிபத்தில் பலி 8ஆக அதிகரித்துள்ளது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் தொழிலாளர்களுடன் ஆலையின் உரிமையாளர் சுதர்சனும்(31) உயிரிழந்தார். பட்டாசு ஆலை விபத்தில் படுகாயம் அடைந்த 16 தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Dinakaran , 22 March, 2023

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணி போட்டிக்கான டிக்கெட்களை பிளாக்கில் விற்ற 12 பேர் கைது

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணி போட்டிக்கான டிக்கெட்களை பிளாக்கில் விற்ற 12 பேர் கைது செய்யப்பட்டனர். சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.  
Dinakaran , 22 March, 2023

பாகிஸ்தானில் உலுக்கிய நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.7 என பதிவு.. ஆப்கானிஸ்தான், சீனாவையும் விடவில்லை

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.5 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் டெல்லி, உத்தர பிரதேச மாநிலங்களில் நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்தனர். இதன் தொடர்ச்சியாக நாட்டின்
Thats Tamil , 22 March, 2023

யுக்ரேனில் ஜப்பான் பிரதமர்- ரஷ்யாவில் சீன அதிபர்: எதிரெதிர் பயணங்களுக்கு காரணம் என்ன?

ஜப்பானிய தலைவர் ஒருவர் அறிவிக்கப்படாத வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது என்பது அரிதானது. அதிலும், இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டுக்கு செல்லும் முதல் ஜப்பானிய பிரதமர் கிஷிடா தான்
BBC , 23 March, 2023

ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்கல்: காங்கிரஸ் எம்.பி.ஜெயராம் ரமேஷ் விமர்சனம்

டெல்லி: அதானியின் மெகா ஊழல் விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதியாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி ஜெயராம் ரமேஷ்  விமர்சித்துள்ளார். ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்கல் என்றும் அவர் விமர்சித்தார்.
Dinakaran , 24 March, 2023

என்னா மனுஷன்யா.. பிரேக்-அப் பிரச்னையை தீர்க்க ரூ.32 கோடியா?ஆமா, அதென்ன லவ் பெட்டர்? என்னன்னு பாருங்க

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் காதல் தோல்வியிலிருந்து மீண்டு வருவதற்காக அந்நாட்டு அரசு 'லவ் பெட்டர்' எனும் பிரசாரத்தை தொடங்கியிருக்கிறது. காதல் தோல்வி காரணமாக இளைஞர்கள் பலர் தவறான பாதையில் சென்று விடுகிறார்கள் என்பதால் அதனை தடுக்கவே அந்நாட்டு அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. இந்த உலகம் இருக்கும் வரை காதல் இருக்கும். காதல் இருக்கும் வரை காதல்
Thats Tamil , 24 March, 2023

சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் தற்காலிகமாக மூடல்!

சென்னை: சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்துக்கு மாற்றாக பரங்கிமலை, நங்கநல்லூர் மெட்ரோ வாகன நிறுத்துமிடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Dinakaran , 23 March, 2023

நாடாளுமன்றத்தை பொதுமக்கள் நேரடியாக அணுகுவது என்பது முடியாத ஒன்று: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: நாடாளுமன்றத்தை பொதுமக்கள் நேரடியாக அணுகுவது என்பது முடியாத ஒன்று என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தை நேரடியாக அணுகுவதை யாரும் அடிப்படை உரிமையாக கோர முடியாது. நாடாளுமன்றத்திற்கு வெளியே குரல் எழுப்பலாம், நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனு அளிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க மக்கள் நாடாளுமன்றத்தில் நேரில் மனு தரக்கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Dinakaran , 24 March, 2023

IND Vs AUS: சென்னை ஒருநாள் போட்டியில் இந்தியாவின் வெற்றியைப் பறித்த 'அந்த ஒரு ஓவர்'

சூர்யகுமாரின் டக் அவுட், விராட் கோலி செய்த ஒரு தவறு, அக்சர் படேலின் ரன் அவுட் இவை அனைத்தையும் தாண்டி ஆஸ்திரேலியாவின் ஒரேயொரு ஓவர் இந்திய அணியின் வெற்றியை முற்றிலுமாக பறித்திருக்கிறது.
BBC , 23 March, 2023

பிரபல கார்நாடக இசைக் கலைஞரும் பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீக்கு மூலையில் ரத்தக் கசிவு

பெங்களூரு: பிரபல கார்நாடக இசைக் கலைஞரும் பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீக்கு மூலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. லண்டனில் உள்ள மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Dinakaran , 24 March, 2023

மதுரையில் மெட்ரோ ரயில்; சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி

மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் அறிவிப்புக்கு சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். மதுரையின் வளர்ச்சிக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு காணும் வகையில், ‘மதுரை மெட்ரோ திட்டம்' அறிவிக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 18,500 கோடி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசுக்கு மதுரை மக்களின் சார்பில் நன்றி என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்திருக்கிறார்.
Dinakaran , 20 March, 2023

உடலில் உரசுபவரைக் குத்துவதற்கு இந்தியப் பெண்கள் பயன்படுத்தும் சின்னஞ்சிறு ஆயுதம்

”ஆனால் ஒரு மாலை அவர் சுயஇன்பத்தில் ஈடுபட்டு என் தோளிலேயே விந்து வெளியேற செய்தார். இனி பொறுக்க முடியாது என்று அப்போது நான் முடிவு செய்தேன்.”
BBC , 21 March, 2023

ஜவுளித்துறையுடன் தமிழ்நாட்டிற்கு நெருங்கிய தொடர்பு..ஜவுளி பூங்கா பற்றி பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

டெல்லி: பிரதமரின் மெகா ஜவுளிப் பூங்கா, உலக அளவிலான செயற்கை இழை மற்றும் ஜவுளித் தொழில்நுட்ப சந்தையில் தமிழ்நாடு அதிக பங்கைப் பெற உதவும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ஜவுளிக்கான சர்வதேச மையமாக மாறுவதற்கான இந்தியாவின் முயற்சிகளை ஊக்குவிக்கும் எனவும் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு ஜவுளித்துறையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது
Thats Tamil , 23 March, 2023

'அகநக முகநக': குந்தவையின் காதலை சிலாகிக்கும் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன்

ஒரு பேரரசின் இளவரசியான குந்தவை, படை தளபதியான வந்தியத்தேவன் மீது ஈர்ப்பு கொள்வதை, அவளால் அவ்வளவு எளிதில் வெளிப்படுத்திவிட முடியாது. அப்போது குந்தவைக்கும், வந்தியத்தேவனுக்கும் இடையில் இருக்கும் அந்த தவிப்பான மனநிலையை குறிப்பிடவே இந்த வார்த்தையை பயன்படுத்தினேன்
BBC , 23 March, 2023

நள்ளிரவில் சரிந்த வீடுகள்! 7.7 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் 11 பேர் பலி.. பாகிஸ்தான் சோகம்

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைத்தொடரில் நேற்றிரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அதனை சுற்றியுள்ள நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நிலநடுக்கத்திற்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 800 கி.மீ நீளத்திற்கு பரந்து விரிந்துள்ள 'இந்து குஷ்' மலைத்தொடரின் கிழக்குப்பகுதியில், அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு உட்பட்ட மலைத்தொடரில் நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Thats Tamil , 22 March, 2023

"நான் தொட்டால் என் பாட்டியின் உடல் சபிக்கப்பட்டுவிடுமா?" - பாலின பேதத்தை கேள்வி கேட்கும் பெண்

தனது பாட்டியின் மரணம் வரை ஹர்ஷிதா தன் வாழ்க்கையில் பாலினப் பாகுபாட்டை எதிர்கொண்டதே இல்லை. அந்த மரணத்தின்போது நடந்த ஒரு விஷயம், சடங்குகள் என்ற பெயரில் நிலவும் மேம்போக்கான அன்றாட பாலினப் பாகுபாடு குறித்து அவர் கேள்வி கேட்பதற்கு வழிகோலியது.
BBC , 24 March, 2023

ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயக படுகொலை: வைகோ கண்டனம்

சென்னை: ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயக படுகொலை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது நீதியை குழிதோண்டி புதைத்த செயலாகும் என வைகோ தெரிவித்தார்.   
Dinakaran , 24 March, 2023

Tata bags title rights for the Women's Premier League

According to a BCCI source, the deal is for five years
ESPN Cricinfo , 23 March, 2023

டெல்லி அரசின் பட்ஜெட்டுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

டெல்லி: டெல்லி அரசின் பட்ஜெட்டுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்திய நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
Dinakaran , 21 March, 2023

அரசுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு ஏற்படுத்திய ஈரோடு ஆணையர் மீது வழக்குபதிவு

ஈரோடு: அரசுக்கு ரூ.30 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மீது 6 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்த போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது. 11 பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்ய ஒப்பந்தம் வழங்கியதில் அரசுக்கு ரூ.6.85 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
Dinakaran , 22 March, 2023

ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து நாடாளுமன்றம் முடக்கம்.. இன்றாவது அவை நடவடிக்கை நடக்குமா

டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வில் 8ஆம் நாள் இன்று கூடும் நிலையில், இன்றாவது அவை நடவடிக்கைகள் நடக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாகவே ராகுல் காந்தி லண்டன் பேச்சு, அதானி விவகாரங்கள் காரணமாக அவை முடங்கி வருகிறது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன.21ஆம் தேதி தொடங்கியது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
Thats Tamil , 23 March, 2023

நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக் கைதி தற்கொலை முயற்சி

கன்னியாகுமரி: இரணியில் நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக் கைதி ராஜன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். நீதிமன்ற காவலில்  நாகர்கோவில் சிறையில் இருந்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. கைதி ராஜன் கழுத்தை அறுத்த போது தடுக்க முயன்ற காவலர் சுகு சுந்தருக்கும் கையில் லேசான காயம் ஏற்பட்டது.
Dinakaran , 24 March, 2023

மாமல்லபுரம் அருகே விபத்து.. ஸ்பாட்டில் தோழி இறப்பு.. வழக்கில் ஆஜராகாத யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட்

செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த விபத்து தொடர்பான வழக்கில் ஆஜராக பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ்
Thats Tamil , 24 March, 2023

'Fully fit' Chahar ready to make comeback at IPL 2023

Fast bowler says he has recovered from a stress fracture and quad grade 3 tear following extensive rehab at the NCA
ESPN Cricinfo , 23 March, 2023

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: சீமான் அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தற்போதைக்கு என் தலைமையிலான கூட்டணிக்கு யாரும் வரமாட்டார்கள். பாஜகவை வர விடாமல் தடுக்க மாநில கட்சிகள் இணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Dinakaran , 23 March, 2023

காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலையில் உள்ள குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
Dinakaran , 22 March, 2023

அண்ணாச்சி போட்ட மாஸ்டர் பிளான்! திமுகவில் இணைந்த அதிமுக நகராட்சி சேர்மன்! என்ன பின்னணி?

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அதிமுக நகர்மன்றத் தலைவர் ராமலட்சுமி முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். நகராட்சி சேர்மனை திமுக பக்கம் செல்லவிடாமல் அதிமுக தரப்பில் பல்வேறு கட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.
Thats Tamil , 23 March, 2023

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணாமலை டெல்லி பயணம்..காரணம் என்ன?

சென்னை: தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ள இந்த சூழ்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார். அதிமுக பாஜக இடையே கூட்டணியில் உரசல் நிலவும் நிலையில் மாநிலத்தலைவர் அண்ணாமலையும் இன்று டெல்லி செல்வது பரபரப்பை அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் ரவி சட்டசபை மரபுப்படி உரை நிகழ்த்தி 2023ஆம் ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடரை தொடக்கி
Thats Tamil , 23 March, 2023

Rohit: 'The confidence Jadeja has in his ability is massive'

The India captain says he told his spinners at the start of day three to "keep it tight, and let the batters make the mistake"
ESPN Cricinfo , 21 March, 2023

கடலூர் அருகே 300 பெட்டி மது பாட்டில்கள் பறிமுதல்

கடலூர்: புதுச்சேரியிலிருந்து கடந்த வரப்பட்ட 300 பெட்டி மது பாட்டில்கள் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுபாட்டில்களை கடத்தி வந்த லாரியையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Dinakaran , 21 March, 2023

மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கான தடகள போட்டி: பதக்கங்களை குவித்த மாற்றுத்திறன் மாணவி!

விழுப்புரம்: மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கான தடகள போட்டியில் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்ற விழுப்புரம் M.R.I.C.R.C பள்ளியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி சுபஸ்ரீ, ஆட்சியர் சி.பழனியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.100, 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், நீளம் தாண்டுதலில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார்.
Dinakaran , 23 March, 2023

திருச்சி, நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் உறையூர், பாலக்கரை, கண்டோன்மெண்ட், தில்லை நகர், தென்னூரில் மழை பெய்து வருகிறது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான புத்தேரி, வடசேரி, பார்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது.
Dinakaran , 20 March, 2023

\"இயேசு\".. மெயின் கருணாநிதி.. எங்க வீட்டு பெண்ணுக்கு உரிமைதொகை தகுதி நிர்ணயிக்க நீ யார்? சீறிய சீமான்

சென்னை: பிஷப்புகள் சர்ச்களுக்கு செல்வதில்லை.. கருணாநிதி வீட்டில்தான் குடியிருக்கிறார்கள். அந்த இடத்தை விட்டு அவர்கள் நகர்வதே கிடையாது.. ஜமாத்துகளும் அப்படித் தான். கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கருணாநிதி செய்த ஏதாவது ஒரே ஒரு நன்மையை சொல்லுங்க பார்ப்போம் என்று நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார். சீமானை பொறுத்தவரை, வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலைப்படாமல், எந்த ஒரு
Thats Tamil , 23 March, 2023

சர்வதேச நீதிமன்றத்தின் கைது வாரண்ட்.. புதினுக்கு இப்படி எல்லாம் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்கா?

மாஸ்கோ: உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு புதினை சிறையில் அவ்வளவு எளிதில் தள்ளிவிடாது என்றாலும் பல்வேறு நாடுகளுக்கு சுதந்திரமாக பயணம் செய்வதில் புதினுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்
Thats Tamil , 20 March, 2023

2,000 ரூபாய் நோட்டுகளை புதிய வடிவில் அச்சிடக்கூடிய எந்த திட்டமும் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: 2,000 ரூபாய் நோட்டுகளை புதிய வடிவில் அச்சிடக்கூடிய எந்த திட்டமும் இல்லை என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2016-ல் வெளியிடப்பட்ட ரூ.2,000 நோட்டுகளை மட்டுமே இறுதியானது என மாநிலங்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
Dinakaran , 22 March, 2023

சான் பிரான்சிஸ்கோவில் இந்திய தூதரக வளாகத்தை சேதப்படுத்திய காலிஸ்தானி குழுவினர் - இந்தியா கடும் கண்டனம்

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக நடந்த போராட்டத்தின்போது தூதரக வளாகத்தை சேதப்படுத்திய கும்பல் குறித்து டெல்லி உள்ள அமெரிக்க தூதரக பொறுப்பு அதிகாரியை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை தமது அதிருப்தியை வெளியிட்டது.
BBC , 21 March, 2023

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்தது

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்தது. பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 200க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்திருந்தனர். பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டும் மனு தாக்கல் செய்த நிலையில் பரிசீலனையில் போது அது ஏற்கப்பட்டது.
Dinakaran , 22 March, 2023

வடமாநில தொழிலாளர்களை கொல்வதாக போலி வீடியோ பரப்பிய பீகார் நபர் கைது! திருப்பூர் போலீஸ் அதிரடி!

திருப்பூர்: தமிழ்நாட்டில் தங்கி வேலை செய்து வரும் பீகார் மாநில தொழிலாளர்கள் அடித்து கொல்லப்படுவதாக போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பட்டன. இதுதொடர்பாக பீகாரை சேர்ந்த நபரை திருப்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணி செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் கூலி தொழிலாளர்கள் முதல் சொந்த நிறுவனங்கள்,
Thats Tamil , 22 March, 2023

பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்கலாம்.. அதுக்குன்னு இதெல்லாம் ரொம்ப ஓவர்! அரசுப் பள்ளி ஆசிரியை ஆதங்கம்!

சென்னை: ஆசிரியர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையும், கல்வியாளருமான உமா மகேஸ்வரி. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அரசுப் பள்ளி ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து பெற்றோர் தாக்குதல் நடத்திய விவகாரம் ஆசிரிய சமுதாயத்தினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களை கண்டாலே மாணவர்கள் பயந்து நடுங்கிய காலம் மலையேறி
Thats Tamil , 23 March, 2023

பென்ஸ் கார் டூ மாருதி..அடுத்து பைக்..சினிமா பாணியில் தப்பி ஓடும் அம்ரித் பால் சிங்..தவிக்கும் போலீஸ்!

அமிர்தசரஸ்: அம்ரித் பால் சிங்கை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில், அவர் சினிமா பாணியில் கார் விட்டு கார் மாறி அடுத்து பைக்கில் சென்று போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி ஓடியிருக்கிறார். தனது வழக்கமான உடைகளை மாற்றிக்கொண்டு ஆதரவாளர்களின் பைக்குகளில் ஏறி சென்றதால் அம்ரித் பால் சிங் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பித்ததாக
Thats Tamil , 22 March, 2023

Jadeja and Axar: Sweep and reverse sweep are difficult here

Axar avoided it while making 74 crucial runs for India; Jadeja benefited from Australia's overuse of it to finish with a match haul of ten wickets
ESPN Cricinfo , 21 March, 2023

Australia bat in series decider against India; Warner in, Green unwell

The pitch in Chennai was dry, prompting Australia to bring in a spinner - Ashton Agar - for a seamer - Nathan Ellis
ESPN Cricinfo , 22 March, 2023

பார்வைத்திறன் சவால் மிக்கவர்களை நிராகரிக்கும் கிரெடிட் நிறுவனங்கள்: சட்டம் என்ன சொல்கிறது?

எந்தவொரு நிதி தொடர்பான ஒப்பந்தத்திற்கும், பார்வை மாற்றுத்திறனாளிகள் தகுதியானவர்கள்தான் என சட்டம் சொல்கிறது. மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டமும் (2016), ஆர்.பி.ஐ வங்கியின் விதிகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.
BBC , 24 March, 2023

India need everything to click to make it past favourites Australia

Both teams are yet to put up the perfect performance but boast enough depth to make the semi-final exciting
ESPN Cricinfo , 24 March, 2023

ஆபாச நடிகையுடன் தொடர்பால் ட்ரம்ப் கைதாவாரா? நியூயார்க், வாஷிங்டன் நகரங்களில் உஷார் நிலை

ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் இறங்கக் கூடும் என்பதால் நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காவல்துறையினர் உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
BBC , 21 March, 2023

ஆஸ்கரை கையில் ஏந்திய அந்த தருணம்.. குழந்தை போல் சிரித்து மகிழ்ந்த பெல்லி- பொம்மன்.. ஷேராகும் போட்டோ

ஊட்டி: ஆஸ்கர் விருதை கையில் ஏந்தியபடி முதுமலை காப்பகத்தின் யானை பராமரிப்பாளர்கள் பெல்லி- பொம்மன் தம்பதி புகைப்படம் அதிகமாக ஷேர் ஆகி வருகிறது. முதுமலை பகுதியில் தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பராமரிப்பாளர்களாக இருப்பவர்கள் பெல்லி- பொம்மன் தம்பதி. இவர்கள் காட்டு நாய்க்கர் எனும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். இவர்களிடம் தாயை பிரிந்த ரகு, அம்மு எனும் இரு
Thats Tamil , 24 March, 2023

6ஜி டெலிகாம் சேவைகளுக்கான சோதனைகள் இந்தியாவில் தொடங்கியுள்ளன: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: 6ஜி டெலிகாம் சேவைகளுக்கான சோதனைகள் இந்தியாவில் தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதிக எண்ணிக்கையில் டெலிகாம் வாடிக்கையாளர்கள் ஊரகப்பகுதிகளில் தான் உள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.
Dinakaran , 22 March, 2023

காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டிக் கொலை: கிருஷ்ணகிரியில் பரபரப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் ஜெகன்(28) பெண் வீட்டாரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கே.ஆர்.பி. அணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெகனை பெண் வீட்டார் வெட்டிக் கொன்றதால் பரபரப்பு நிலவி வருகிறது.
Dinakaran , 21 March, 2023

ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம்

கொல்கத்தா: ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாற்றியுள்ளனர் என மம்தா தெரிவித்தார்.
Dinakaran , 24 March, 2023

அரை நூற்றாண்டில் 10,000 பாடல்கள் பாடிய டி.எம்.எஸ் எப்படி சினிமாவுக்குள் வந்தார் தெரியுமா?

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் தொடங்கி எழுபதிகளில் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான ஒருதலை ராகம் திரைப்படத்தின் நாயகன் வரை, பல்வேறு தலைமுறையைச் சேர்ந்த நடிகர்களுக்கு பாடல்கள் பாடியிருக்கிறார்டி.எம்.சவுந்திரராஜன்
BBC , 24 March, 2023

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 6வது முறையாக ஃபின்லாந்து முதலிடம்: 125வது இடத்தில் இந்தியா

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 6வது முறையாக ஃபின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. வருமானம், சுதந்திரம், தாராள மனப்பான்மை, ஊழல் இன்மை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சி கணக்கிடப்பட்டுள்ளது. 136 நாடுகள் கொண்ட பட்டியலில், இந்தியா 125வது இடத்தில் உள்ளது.
Dinakaran , 21 March, 2023

உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது தெரியுமா?

உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது தெரியுமா?
BBC , 23 March, 2023

திடீரென குலுங்கிய பூமி.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி.. ரிக்டரில் 3.8 ஆக பதிவு

இம்பால்: மணிப்பூர் மாநிலம் மொய்ராங்க் பகுதியில் இன்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி, சிரியாவில் கடந்த மாதம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 50
Thats Tamil , 24 March, 2023

பாகிஸ்தான்: ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, முஸ்லிம் செய்தியாளர் கைது

யாருடைய மதத்தையும் இழிவுபடுத்த எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என சகித்துக் கொள்ள முடியாது என சிறுபான்மை விவகாரங்களுக்கான மாகாண அமைச்சர் கியான்சந்த் இஸ்ரானி
BBC , 24 March, 2023

Dravid: India have 'narrowed it down to 17-18 players' for ODI World Cup

Suryakumar Yadav is "learning the 50-over game a little bit" and the team needs to "be patient with him", Dravid says
ESPN Cricinfo , 22 March, 2023

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023-24: முக்கிய அம்சங்கள் - விரிவான தகவல்கள்

150 முன்னோடி விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென மத்திய, மாநில அரசு நிதியிலிருந்து மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
BBC , 21 March, 2023

காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் தீ: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

நடந்த சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
BBC , 23 March, 2023

இலங்கையில் வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பணத்தை ஏமாற்றியவரை தேடி தமிழ்நாடு வந்த இளைஞர் - என்ன நடந்தது?

ஜெயக்குமார் அளித்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இன்று ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
BBC , 21 March, 2023

ஆந்திரா, தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இருந்து 2 நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்!

சென்னை: ஆந்திரா, தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இருந்து 2 நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர ஐகோர்ட் நீதிபதி பட்டு தேவானந்த், தெலங்கானா ஐகோர்ட் நீதிபதி தேவராஜு நாகார்ஜூன் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Dinakaran , 23 March, 2023

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023-24: வரவேற்பும் ஏமாற்றமும்

"இந்த நிதிநிலை அறிக்கையில் சிறு தானியங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அங்கக வேளாண்மைக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவமும் வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
BBC , 22 March, 2023

லிவ்-இன் ஜோடிகளின் பதிவேடு அவசியமா? பெண்ணின் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்?

லிவ்-இன் ஜோடிகளின் பதிவேட்டை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்று புதிய விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. அவ்வாறான பதிவேடு அவசியமா? லிவ்-இன் உறவில் பெண்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லையா? அந்த உறவில் உள்ள பெண்களின் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்?
BBC , 22 March, 2023

காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: மருமகனை வெட்டிக் கொன்று விட்டு போலீஸில் மாமனார் சரண்

ஜெகன் கொலை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட காணொளி காட்சி ஒன்று, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஜெகனின் கால்களை ஒருவர் பிடித்துக் கொள்ள, 2 பேர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டும் காட்சிகள் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
BBC , 22 March, 2023

ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாகும்: எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

சென்னை: ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாகும் என திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். ராகுலின் ஒற்றுமை நடைபயணம் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஒன்றிய பாஜக அரசு உணர்ந்துள்ளது. ராகுல் காந்தியை 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்கவிடாமல் செய்துவிடலாம் என்று பாஜக திட்டமிட்டுகிறது என அவர் தெரிவித்தார்.
Dinakaran , 24 March, 2023

ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலைக்கு இணையானது: எம்.பி.கனிமொழி கண்டனம்

சென்னை: ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலைக்கு இணையானது என திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். இவ்வளவு அவசரமாக இப்படியொரு தீர்ப்பு வரக்காரணம் என்ன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Dinakaran , 24 March, 2023